Sample Text

Theme images by Storman. Powered by Blogger.

Search This Blog

Pages

Friday, 23 December 2016

பலரும் தெறிந்திறாத பேஸ்புக்கில்(facebook) மறைந்துள்ள ரகசியங்கள்!

- No comments
இப்ப இருக்குற நெருக்கடியான சூழ்நிலைல, நம்மள நிம்மதியா வச்சுக்குற ஒரே விஷயம் ஃபேஸ்புக் தான்.சில சமயங்கள்ல அவஸ்தை பட வைக்கிறதும் அதுதான். இப்படிப்பட்ட ஃபேஸ்புக்கிற்கு பலம் சேர்க்க இன்னொரு விஷயமும் இருக்கு. எல்லாம் தெரியும்னு நினைச்சா தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கும். அப்படி உங்களுக்கு தெரியாத ஃபேஸ்புக் ரகசியங்கள் ஆறு சொல்றோம் வாங்க பாஸ்.

1) நம்மள கூட்டணில சேக்காதவன் யாரு?
ஃப்ரெண்டு ரெக்வெஸ்ட் அனுப்பியும், உங்கள கூட்டணில சேர்க்காதவன்லாம் யாருன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அவங்களை எல்லாம் பாக்கணும், அல்லது அந்த ரெக்வெஸ்ட்ட கேன்சல் பண்ணனும்னு தோணுமில்ல.. இதான் பாஸ் வழி.ஃபேஸ்புக்க திறங்க. சில விஷயத்துக்கு ஆப் உதவாது. வெப்ல தான் திறக்கணும்
friend request tab க்ளிக் பண்ணுங்க.
அதுல ‘See all’ ந்னு கீழ இருக்கும். அது மேல ஒரு க்ளிக்
இப்ப நமக்கு மனு போட்டவங்க பேரெல்லாம் வரும். அது இருக்கட்டும். ‘view sent requests’ ந்னு ஒண்ணு இருக்கும். அத க்ளிக் பண்ணா, நமக்கு நேக்கா டேக்கா கொடுத்தவங்க லிஸ்ட் வரும்.
இனி அவங்கள என்ன செய்யணுன்றது உங்க இஷ்டம். அதனால இந்த பாயின்ட் இஸ் யுவர்ஸ்

2) ஃபுட்பால் விளையாடி இருக்கீங்களா?
கெட்டது இருக்கட்டும் பாஸ். ஃபேஸ்புக்ல ஃபுட்பால் விளையாடி இருக்கீங்களா?     
                 தம்மாத்துண்டு கேம் தான். ஆனா வாரம் முழுக்க விளையாடலாம். தெரியுமா? யூரோ2016க்காக மார்க் ரெடி பண்ண கேம். இந்த ஃபுட்பாலை கைகளால் விளையாட நீங்க செய்ய வேண்டியதெல்லாம்…முதல்ல உங்க மெசெஞ்சர் அப்டேட்டட் வெர்ஷனான்னு பாத்துக்கோங்க.எமோஜி லிஸ்ட்ல இருந்து ஃபுட்பால் எமோஜியை உங்க ஃப்ரெண்டு யாருக்காவது அனுப்புங்க. மேனேஜர் மாதிரியான வில்லன்களா இல்லாம பாத்துக்கோங்க.எமோஜி போனதும், அது மேல க்ளிக் பண்ணுங்க. கேம் ரெடி.
                     இனி நீங்க அடிக்கிற ஸ்கோர் எல்லாம் அந்த ஃப்ரெண்டுக்கும் அப்டேட் ஆயிடும். அதனால, நீங்களே ஒரு ஃபேக் ஐடி ரெடி பண்ணி, அதுக்கு அனுப்புறது பாதுகாப்பான வழிமுறைன்னு பாக்தாத் அரசரே சொல்லியிருக்காரு.

3) ஓடியாட வேணாம்... செஸ் ஓக்கேவா?
ஃபுட்பால் எல்லாம் ஆகாது. வீடியோகேம்னாலும் உட்கார்ந்து விளையாடுற மாதிரி வேணும்னு நினைக்கறீங்களா? உங்களுக்காகவே செஸ் கூட வச்சிருக்குது ஃபேஸ்புக்.
முதல்ல உங்க மெசெஞ்சர் அப்டேட்டட் வெர்ஷனான்னு பாத்துக்கோங்க.
யார் கூட விளையாடணுமோ அவங்க கூட சாட் விண்டோ திறந்துக்கோங்க.
”@fbchess play” டைப் செஞ்சு அனுப்புங்க.. செஸ் போர்டு ஓப்பன் ஆகிடும்.

4) லைக் பண்ணுங்க. ஆனா...!
“நீ எப்படி அபிநயாவுக்கு லைக் போடலாம்”ந்னு உங்க கேர்ள் ஃப்ரெண்டு சண்டை போடுறப்ப உங்க மனசுல என்ன ஓடும்? “நமக்கு நாம லைக் போட்டதே தெரியாது. இதுல இவளுக்கு அடுத்தவங்க லைக் போடுறதெல்லாம் எப்படி தெரியுது”ந்னுதான? மார்க் எல்லாத்துக்கும் மார்க்கம் வச்சிருக்காரு பாஸ். வாங்க சொல்றேன்.
”Photos liked by……” இந்த புள்ளி இருக்கிற இடத்துல யார பத்தி விசாரிக்கறீங்களோ அவங்க பேர டைப் பண்ணி , சர்ச் பாக்ஸுல தேடுங்க. வரிசையா வந்துடும். “நீ போட்ட லைக்க காட்டு. நீ யார் என்பதை சொல்கிறேன்னு” ஏபிஜே… வேணாம்.. யாரோ சொல்லியிருக்காங்க பாஸ். அதனால இனிமேல லைக் போடுறப்ப, ரோடு கிராஸ் பண்ற மாதிரி டக்குன்னு பண்ணாம, 100ரூ நோட்டை செலவு பண்ற மாதிரி நிண்ணு, நிதானமா பண்ணுங்க.
இதே மாதிரி நீங்க போட்ட லைக்ஸை நீங்களே பாக்கணும்ன்னா Photos liked by me டைப் பண்ணுங்க.

5) லாக் ஆஃப் பண்ண மறந்துட்டீங்களா?
அவசரத்துக்கு பக்கத்து வீட்டுல காப்பி தூள் வாங்குற மாதிரி இப்பலாம் மொபைலோ, லேப்டாப்பையோ கூட வாங்குறாங்க. ஃபேஸ்புக் லாக் இன் பன்ணி நாலு லைக்ஸ் போட்டு, நமக்கு வந்த அஞ்சு லைக்க பாக்குறதுல அப்படி ஒரு சொகம். ஆனா பாருங்க பிள்ளைவாள்... திரும்ப கொடுக்கறப்ப லாக் ஆஃப் பண்ண சில சமயம் மறந்திடுவோம். அப்ப என்ன செய்றது?
பயப்படாம Settings-Security- Where You're Logged In -அதுல எந்த லாக் இன் வேணாமோ, அதுல ‘end activity கொடுத்துடுங்க. உங்க எல்லா கடலை சாட்களும் பத்திரமா அவங்க கண்ணுல படாம பாதுகாத்திடலாம்.

6) சேவ் பண்ணி வைங்க!

அவசரமா டைம்லைன ஸ்க்ரோல் பண்ணிட்டு இருப்போம். அப்பன்னு பாத்து நாலு எம்பி சைஸ்க்கு ஒரு நல்ல ஸ்டேட்டஸ் ஓண்ன எழுதியிருப்பாங்க. அத படிக்கிற மூடோ, நேரமோ அப்ப இல்லாம இருக்கலாம். ஆனா, அத படிக்கலான்றப்ப தேடி எடுக்கிறது சிரமம். எழுதினவரு பேரு கூட அப்ப ஞாபகத்துக்கு வராது. அதுக்காகவே ஃபேஸ்புக் கொடுத்திருக்கும் சோப்பு டப்பா தான் “Save" ஆப்ஷன்.
இதுக்கு வழிமுறைலாம் ரொம்ப சிம்பிள். அந்த ஸ்டேட்டஸோட வலது மூளைல இருக்கிற டவுன் ஏரோவை க்ளிக் பண்ணாலே save post ஆப்ஷன் வரும். அதை க்ளிக் பண்ணா சேவ் ஆயிடும். அப்படி சேமிச்சத எல்லாம் எடுத்து படிக்கணும்ன்னா இடது பக்க மெனுல Explore கீழ Saved இருக்கும்.
இன்னும் நிறைய பூதங்களை உள்ள வச்சிருக்கும் ஒரு அலாவுதீன் விளக்குதான் ஃபேஸ்புக் .

Courtesy: Vikatan

Monday, 25 July 2016

ஆன்ராயிடு போனுக்கான ப்ரிஸ்மா(Prisma Official™) ஓவிய எபெக்ட் அப் ஸ்

- No comments




இன்று ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்படும் ஒரு விடயம், பிரிஸ்மா போட்டோ செயலி. அடுத்தவர் கண்களை கவரும் வண்ணத்தில் எமது போட்டோகளை உண்மையான ஓவியம் போலவே மாற்றும் இந்த செயலி அதிகாரபூர்வமாக ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டும் வெளியாகி உள்ளது. அனைத்து ஸ்மார்ட் போன் பாவனையாளர்களையும் கவர்ந்திருக்கும் இந்த ப்ரிஸ்மா அப்ஸ் தரும் ஓவிய எபெக்ட்-ஐ இப்போது உங்களது ஆன்ராயிடு போனிலும் அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொள்ள முடியும். ஆன்ராயிடு ப்ரிஸ்மா செயலியை பெற்றுக்கொண்டு உங்களது போட்டோக்களையும் அழகிய ஓவியம் போல மாற்றிடுங்கள்.

Click here to Download Prisma

Monday, 18 July 2016

வரிசையாய் குறையும் மொபைல் இண்டர்நெட் விலை : அலற வைக்கும் உண்மை பின்னணி.??

- No comments
கடந்த சில நாட்களாக இந்திய டெலிகாம் சந்தையில் பிரபலமாக விளங்கும் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் சேவைகளை அதிகரிக்கும் நோக்கில் கட்டணங்களைக் குறைத்து வருகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் சில வாரங்களில் இந்திய சந்தையில் தனது வியாபாரத்தைத் துவக்க இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைத்து வருவதாகக் கூறப்படுகின்றன.

அதன் படி ஐடியா நிறுவனம் தனது டேட்டா சேவையில் சுமார் 45 சதவீதம் அதிகரித்துப் கூடுதல் டேட்டா வழங்க இருப்பதாக அறிவித்தது. அதன் படி ரூ.8 முதல் ரூ.225 வரையிலான டேட்டா பேக் கட்டணங்களில் முன்பை விட டேட்டா அதிகமாக வழங்குவதாக அறிவித்தது. கடந்த வாரம் இதற்கான அறிவிப்பினை ஐடியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் தனது சேவைகளுக்கு ஏற்ப டேட்டா அளவினை சுமார் 67 சதவீதம் அதிகரிப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. இதன் மூலம் ஏர்டெல் டேட்டா சேவைகளில் பழைய கட்டணங்களுக்கு முன்பை விடக் கூடுதல் டேட்டா பெற முடியும்.
தற்சமயம் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பழைய விலைக்குக் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்த நிலையில் டெலிகாம் சந்தையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களும் இதே போன்ற சலுகையை வரும் நாட்களில் அறிவிக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.
ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களைத் தொடர்ந்து வோடாஃபோன் சில நாட்களில் கூடுதல் டேட்டா வழங்கும் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.


பல்வேறு நிறுவனங்களும் தங்களது இண்டர்நெட் பேக் கட்டணங்களை மாற்றியமைக்க முக்கியக் காரணமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கின்றது. இந்நிறுவனம் தனது 4ஜி சேவையைச் சந்தையிலேயே குறைந்த விலையில் வழங்க இருப்பதால் மற்ற நிறுவனங்கள் ஜியோவுடனான போட்டியைச் சமாளிக்கும் நோக்கில் அதிரடி விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளன எனச் சந்தை வட்டாரங்களில் கூறப்படுகின்றது.
ரிலையன்ஸ் ஜியோ பிரீவியூ 4ஜி சோதனையில் சுமார் 15,00,000 வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 26 ஜிபி வரை 4ஜி டேட்டா பயன்படுத்துவதாக ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ வரவு மூலம் டெலிகாம் சந்தையில் இண்டர்நெட் டேட்டா பேக் கட்டணங்கள் சுமார் 15-20 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Friday, 15 July 2016

POKEMON GO கேம்-ஐ ஹேக் செய்து விளையாடுவது எப்படி..?

- No comments
இன்று உலகிட்கு அறிமுகமாகும் எந்த ஒரு விடயமும் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களின் மூலமாகவே பிரபல்யம் பெறுகின்றது. அதிலும் குறிப்பாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடக மிகவும் துரிதமாக அனைத்து புதுவரவுகளும் உலக மக்களை சென்றடைகின்றன.
அந்த வகையில் அண்மைய நாட்களில் சமூக வலைத்தங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு விடயம் தான் போகிமன் என்று பெயரிடப்பட்டுள்ள ரியாலிட்டி கேம்.
எமது ஆன்ராயிடு அல்லது ஐபோன்-இல் காணப்படும் ஜீ.பீ.எஸ் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்த கேம்-ஐ ரியாலிட்டி ஆகவே விளையாட முடியும்.
புதுமையான ஒரு முயட்சி என்பதால் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களின் மத்தியில் மிகவும் வரவேற்கப்பட்டு ஒரு கேம் ஆக மாறியது. ஒரு இடத்தில் இருந்து விளையாடுவதையும் தாண்டி குறித்த கேம்-இல் இருக்கும் லெவல்-களை முடிக்க நாம் எமது போனுடன் பயணம் செய்ய வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டுக்கு அமைய இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த
போகிமன் கேம் , பல மில்லியன் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களால் விரும்பி விளையாடப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய பதிவிலே இந்த கேம்-ஐ ரியாலிட்டி முறையில் விளையாடாமல் ஹேக் செய்து இதனுடைய லெவல்-களை கடப்பது எப்படி என்று பார்ப்போம்.
இந்த ஹேக் ஆன்ராயிடு போன் களுக்கு மட்டும் என்பதும் உங்களுடைய போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

ரூட் (Root) பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்!

போகிமன் கேம்-ஐ ஹேக் செய்வது எப்படி

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் போகிமன் ஹேக் அப்ஸ்-ஐ உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து உங்களது போன் லொகேஷன்-ஐ மறைத்து பொய்யான லொகேஷன்-ஐ காட்டக்கூடிய மோக் லொகேஷன் மோடியுல் செயலியை நிறுவி கொல்லுன்கள். (பதிவின் இறுதியில் தரவிறக்குவதட்கான லின்க் உள்ளது.)
அடுத்து உங்களது போன் லொகேஷன்-ஐ மறைத்து பொய்யான லொகேஷன்-ஐ காட்டக்கூடிய ஜீ.பீ.எஸ் மோக் லொகேஷன் செயலியை நிறுவி கொல்லுன்கள். (பதிவின் இறுதியில் தரவிறக்குவதட்கான லின்க் உள்ளது.)
இப்போது மோக் லொகேஷன் அப்-ஐ திறந்து அதிலே போகிமோன் அப்-ஐ தெரிவு செய்யுங்கள்.
இப்போது உங்களது போனை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்யுங்கள். அடுத்து உங்களது போகிமன் கேம்-ஐ ஆரம்பித்து விட்டு மினிமைஸ் செய்து விடுங்கள்.
அடுத்து பொய்யான ஜீ.பீ.எஸ் லொகேஷன்-ஐ காட்டப்பக்கூடிய செயலியை ஆரம்பித்து உங்களுடைய குறித்த இடத்தில் இருந்து இன்னொரு இடத்திட்க்கு செல்லுங்கள். இரண்டு இடங்களையும் லாங் ப்ரெஸ் செய்து விட்டு பச்சை நிற ஐகான்-ஐ கிளிக் செய்வதன் மூலம் பொய்யான லொகேஷனுக்கு பயணம் செய்ததாக உருவாக்க முடியும்.
இப்போது உங்களது போனை ஒரு முறைரீஸ்டார்ட் செய்யுங்கள். அடுத்து உங்களது போகிமன் கேம்-ஐ ஆரம்பித்து விட்டு மினிமைஸ் செய்து விடுங்கள்.
அடுத்து பொய்யான ஜீ.பீ.எஸ் லொகேஷன்-ஐ காட்டப்பக்கூடிய செயலியை ஆரம்பித்து உங்களுடைய குறித்த இடத்தில் இருந்து இன்னொரு இடத்திட்க்கு செல்லுங்கள். இரண்டு இடங்களையும் லாங் ப்ரெஸ் செய்து விட்டு பச்சை நிற ஐகான்-ஐ கிளிக் செய்வதன் மூலம் பொய்யான லொகேஷனுக்கு பயணம் செய்ததாக உருவாக்க முடியும்.


Mock location mod App:

GPS Mock location App:

8 Amazing YouTube Hacks That’ll Make Your Video Watching Experience Easier!

- No comments

YouTube is an indispensable part of our lives. Irrespective of where we might be and what me might do, YouTube is something that panders equally to all of us. But ever wondered how you can tweak YouTube to your advantage? Well, here are some essential hacks.

1. To download a YouTube audio

How many times do you have to jostle between websites/freeware that allow you to download the audio of the video you're watching? Well, not anymore.
Simply replace "youtube" with "listentoyoutube" in the URL to download the audio!


2. Download YouTube videos

You want to pick out a few videos for your big classroom presentation, but because there's paucity of time, you find it irritating to go through a million "video downloader" sites. So what do you do?
You simply put "ssyoutube" in place of "youtube" in the URL and download the video in any quality available.


3. Bypass the age restriction

What about all those raunchy videos that require an age restriction?
Simply replace "youtube" with "nsfwyoutube" to bypass it.

4. To block YouTube advertisements

Ads are irksome, aren't they?
Well, not anymore! Typing "youtubeskip" instead of "youtube" in the URL can help you get around it.
                   

5. To play the video on loop!

Replacing "youtube" with "listenonrepeat" in the URL and the video would loop without your interrestrictions

6. Defeat country restrictions

There are some videos that are specific to one/more countries and are out of bounds for you, so how do you access them?
Here's how a normal YouTube link looks like:

http://www.youtube.com/watch?v=xxxx

Copy the "xxxx" string of characters and paste it so that the URL reads:

http://www.youtube.com/v/xxxxxx

7. To line-up all the videos from a specific         YouTube channel

If you like watching a lot of videos from a specific YouTuber, this hack is perfect:
Add "&list=UL" to any video and it will spawn a meta playlist containing all the video uploads by the uploader, in chronological order.


8. To turn the video into a GIF

Make a gif out of the YouTube video by replacing "youtube" with "gifyoutube".


Thursday, 14 July 2016

போக்கிமான் கோ- ஓடி விளையாட வைக்கும் தெறி கேம்!

- No comments
கடந்த சில நாட்களாக உலக அளவில் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ட்ரெண்டாகிக் கொண்டு இருக்கும் ஒரு வார்த்தை என்ன தெரியுமா? #PokemonGO.
50mb இல் இருக்கும் இந்த கேம், இவ்வளவு விரைவாக பலரை ஆச்சர்யப்படுத்தும் என அதன் நிறுவனமே எதிர்பார்த்து இருக்காது. மீம் பாய்சும், இப்போது, போக்கிமான் மீம்ஸ்களை இணையத்தில் கொட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்னமும் , இந்தியாவில் இந்த கேம் வெளியிடப்படவில்லை என்றாலும், அதன் apk ஃபைலை டவுன்லோடு செய்து பலர் விளையாட ஆரம்பித்து இருக்கிறார்கள். இதுபோன்ற ஆக்மென்ட்டட் ரியாலிட்டி கேம்களைப் பற்றிய ஒரு சின்ன இன்ட்ரோ....
கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்போதிருக்கும் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக, சிறுவர்களை விடவும் பெரியவர்கள்தான் கேம்களுக்கு அதிகம் அடிமை ஆகிறார்கள். ஒரு கையில் விளையாடும் கேம்களில் ஆரம்பித்த இந்த கேம் புரட்சி , விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டெட் ரியாலிட்டியைக் கடந்து சென்று கொண்டு இருக்கிறது.
விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகளைப் பொருத்திக் கொண்டு கேம்களை விளையாடுவது ஒரு வகையெனில், ஆக்மென்டெட் ரியாலிட்டியில் கேம்களை விளையாடுவது என்பது வேற லெவல். தற்போது புகைப்படங்கள் எடுக்கும் போது பலர் ஆக்மென்டெட் ரியாலிட்டியை பயன்படுத்தினாலும், கேம்களில் இதனை பயன்படுத்தும் போது, கேம் நம்மை அதன்மீது அதிவிரைவாக ஒன்ற வைத்துவிடும். நீங்கள் விளையாடும் ஜிடிஏ வைஸ் சிட்டி ( GTA Vice City ) போன்ற கேம்களில், ஏதோவொரு நகரத்திற்குள் சுற்றிக்கொண்டு இருப்பீர்கள். அதற்குப்பதிலாக நம் நகரத்திற்குள் சுற்ற ஆரம்பித்தால்? அதுவும் நீங்கள் உங்கள் பைக்கில் சென்று ஒவ்வொரு இலக்கையும் அடைய வேண்டும் என்றால் எப்படி இருக்கும்? அதைத் தான் ஆக்மென்டெட் ரியாலிட்டி சாத்தியப்படுத்துகிறது.

ஆக்மென்டெட் ரியாலிட்டி என்னும் தொழில்நுட்பத்தின் மூலம் மொபைல் கேமரா வழியாக நிஜ உலகிலேயே, ஒரு மாய உலகை உருவாக்க முடியும். ஜிபிஎஸ்ஸின் துணையில், இதனை சாத்தியப்படுத்துகிறது இந்தத் தொழில்நுட்பம். உங்களின் நிஜ உலகில், ஆக்மென்டெட் ரியாலிட்டி என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்களால் ஒரு மாய உலகை உருவாக்க முடியும்.

சரி, போக்கிமான் கோ ஹிட்டடிக்க என்ன காரணம்?

2012-ம் ஆண்டின் இறுதியில், ஆக்மென்டெட் ரியாலிட்டியை மையப்படுத்தி வெளியான இங்க்ரெஸ் இன்றளவிலும் சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருக்கிறது. தற்போது, ஆக்மென்டெட் ரியாலிட்டியை மையப்படுத்தி வந்து இருக்கும் புது கேமான போக்கிமான்-கோ இணையத்தைக் கலக்கிக் கொண்டு இருக்கிறது. தினமும் ஆண்ட்ராய்டு மொபைல்களில் ட்விட்டர் பயன்படுத்தும் நபர்களை ஓவர்டேக் செய்து இருக்கிறது போக்கிமான்-கோ.
கூகுளில் apk ஃபைலை டவுன்லோடு செய்வது விளையாடுவது அவ்வளவு கடினமான வேலையாகத் தெரியவில்லை. முதல் போக்கிமான் பொம்மையை கண்டுபிடிப்பது மிகவும் எளிதாக இருந்தது. நாம் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே, க்யூட்டாக அமர்ந்து இருக்கிறது.
ஆனால், அது மறைத்து வைத்து இருந்த சுவாரஸ்யங்கள் ஏராளம். நிஜ உலகின் வரை படத்தை, கார்ட்டூனாக மாற்றி இருந்தது. படத்தில் ஆங்காங்கே நீலநிற க்யூப்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. அவற்றை க்ளிக் செய்தபோது, Fountain at EA என்றது. அடுத்ததாக, நாம் எக்ஸ்பிரஸ் அவென்யுவிற்கு செல்ல வேண்டும். பலமுறை அங்கு சென்று இருந்தாலும், அங்கு ஃபவுன்டைன் எங்கே இருக்கிறது என்பதை முதலில் யோசிக்க வேண்டியதாக இருந்தது. கண்டுபிடித்து அங்கு சென்று, 'காட்சா' (அதாவது 'பிடித்துவிட்டேன்' என்பதை கேம் இப்படி சொல்கிறது) அடித்ததும், அடுத்து ஸ்ரீ ருக்மணி சிலை என்றது. கூகுள் மேப்பின் உதவியுடன், அங்கு சென்று கொண்டு இருக்கிறேன்.
போக்கிமான் -கோ நமது மொபைலின் ஜிபிஎஸ்ஸையும், கடிகாரத்தையும் வைத்து நாம் இருக்கும் இடத்தை கணிக்கிறது. அதற்கேற்ப, போக்கிமான் பொம்மைகளை உங்களது மாய உலகில் நிலவ விடுகிறது.

விளையாட ஆரம்பித்த சிலர் நடந்தோ, பைக்கிலேயோ சென்றால் கவனக்குறைவு ஏற்படும் என்பதால், அதிக போக்கிமான்களை பெற கால் டாக்ஸிகளில் பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த கேமிற்கு அடிமை ஆகியிருக்கிறார்கள். கேமை இலவசமாக டவுன்லோடு செய்து விளையாட முடியும் என்றாலும், மற்ற கேம்களைப்போல், இதிலும் பணம் கொடுத்து கேமில் வெற்றி பெறுவதற்கான பொருட்களைப் பெற முடியும். இது எந்த அளவிற்கு ஹிட் என்பதற்கு கீழே உள்ள படம் தான் சாட்சி.
ஆனால், கேமர்களுக்கு இதெல்லாம் பெரிய பிரச்னை இல்லை. அவர்களுக்கு கிடைக்கும் புதிய அனுபவமும், தேடலும், அவர்களை இந்த கேமிற்குள் இழுத்துச் செல்கிறது. ரத்தின விநாயகர் கோவில், ருக்மணி சிலை என இது காட்டும் இடங்கள், நமக்கு அருகிலேயே இருந்தாலும், நாம் ஏன் அதனை கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணம் வருகிறது. ஆனால், நம்மைச் சுற்றி இத்தனை அழகான லேண்ட் மார்க்குகள் இருக்கின்றன என்பதைக் காட்டிச் சிரிக்கிறான் போக்கிமான்
நிஜ உலகின் ஆபத்துகள்
வெளியாகி சில நாட்களிலேயே, போக்கிமான்-கோ மிகச்சிறந்த ஆக்மென்டெட் ரியாலிட்டி கேம் என்ற பெயரை பெற்று இருக்கிறது. கேமின் மீதான அதீத போதையில் சிலர் போக்கிமான் பொம்மைகளை எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இது எந்த அளவிற்கு நீண்டு இருக்கிறதெனில், ஒரு பெண் போக்கிமான் பொம்மையை தேடிச் சென்ற இடத்தில், ஒரு பிணத்தை கண்டிருக்கிறார். இந்த நிலையில் செல்கிறது இந்த கேம்.
இதைப்போன்ற கேம்கள் ஹிட் அடிக்க காரணமே, இதன் நிஜ உலக கனெக்ட்தான். உங்களை, நீங்கள் சக்திமானாக,ஜேம்ஸ் பாண்டாக கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு வீடியோ கேமை, நிஜ உலகோடு பயணிக்க வைப்பதில் ஆபத்துக்களும் இல்லாமல் இல்லை.இதுபோன்ற கேம்களில் இருக்கும் பிரச்னை, நம்மால் விளையாட்டின் வழியாக நிஜ மனிதர்களை சந்திக்க முடியும் என்பதுதான். புது நட்புலகத்தை காட்டும் அதே வேளையில், இதுபோன்ற விளையாட்டுக்கள் , நம்மை ஆபத்திலும் சிக்க வைத்துவிடும். நீங்கள் மெரினா பீச்சில் நின்று விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள், அது அடுத்த கட்டமாக ஆள் நடமாட்டமில்லாத ப்ரோக்கன் பிரிட்ஜை நோக்கி கைக்காட்ட வாய்ப்பு இருக்கிறது.
இதுவரையில் போக்கிமான்கோ விளையாட்டை வைத்து, நான்கு திருட்டுச் சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. சில தடை செய்யப்பட்ட இடங்களுக்கும் , மக்கள் சென்று இதை விளையாட ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்களை போலீஸார் எச்சரித்து இருக்கிறார்கள்.
விக்கின்ஸ் என்ற பெண்மணி போக்கிமானை தேடச் சென்ற இடத்தில், ஒரு பிணத்தைக் கண்டு இருக்கிறார். அவ்வளவு நீர் இருந்த இடத்திற்கு ஏன் சென்றீர்கள் என காவல்துறையினர் கேட்டதற்கு, "தண்ணீரில் போக்கிமான் இருக்கும் என எண்ணினேன்.எப்படியும் இன்னமும் தேடத்தான் போகிறேன் " என பதில் அளித்து அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார்.
எது நிஜம்... எது கனவு என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். மாய உலகில் ஒரு கட்டத்திற்கு மேல் சஞ்சரிப்பது, நிஜ உலகிலும் பெரும் மாற்றங்களை கொண்டு வரலாம். ஏனெனில் நாம் மாய உலகு என நினைத்து விளையாடுவதே நிஜ உலகில்தான்.
இவற்றையெல்லாம் கடந்து, ஒரு தொழில்நுட்பம் வரும் போதெல்லாம் அதற்கு ஆதரவாகவும் , எதிராகவும் கருத்துகள் வருவது இயல்புதான். ட்ரோன்கள் பயன்படுத்தினால், கைது செய்யும் அதே உலகில் தான், சில மாதங்களுக்கு முன்னர், உலக ட்ரோன் திருவிழாவை நடத்தினார்கள். விர்ச்சுவல் ரியாலிட்டியில் டெம்பிள் ரன் கேமை தெறிஃபிக்காக ஒரு கூட்டம் விளையாடுகிறது எனில், விர்ச்சுவல் ரியாலிட்டியில், ஆபாசப் படங்கள் பார்க்கிறார்கள் என இன்னொரு பக்கம் எதிர்ப்பும் வரத்தான் செய்கிறது.
ஆக்மென்ட்டட் ரியாலிட்டியிலும், இது போன்று சில பிரச்னைகள் எழலாம். ஆனால், அவற்றை புறந்தள்ளிவிட்டு பயணித்தால், வித்தியாசமானதொரு அனுபவத்தை, போக்கிமான் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிரிட்ஜ் ஃபவுன்டைன், பீட்டர்ஸ் ரோடு எங்கு இருக்கிறதென யாராவது சொல்ல முடியுமா ?

Source: Vikatan

Sunday, 10 July 2016

இன்காக்னிட்டோ மோடு(Incognito Mode)

- No comments


இண்டர்நெட் உலகில் நிறைந்திருக்கும் அளவில்லா தரவுகளில் நன்மை மற்றும் தீமை இரண்டும் அடங்கியுள்ளது. இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்வர். பொதுவாக நம்மவர்கள் இண்டர்நெட் பயன்படுத்தும் போது அதிஸ் இருக்கும் அனைத்தும் நமக்கு முழுமையாகத் தெரிவதில்லை, எனினும் தினமும் எதையாவது கற்று கொண்டே தான் இருக்கின்றோம்.
இண்டர்நெட்டில் சில ரகசிய தேடல்களை மேற்கொள்ள இதுவரை நாம் பயன்படுத்திய இன்காக்னிட்டோ குறித்த சில தகவல்களைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம். இன்காக்னிட்டோ மோடு குறித்த இந்தத் தகவல்கள் இந்த அம்சம் குறித்த பார்வையை மாற்றிவிடும்.


  • இண்டர்நெட்டில் நம்மால் மறைந்திருக்கவே முடியாது. ரகசியமாக பிரவுசிங் செய்வதால் நீங்கள் தேடுவதை யாரும் பார்க்க முடியாது என்பது எல்லாமே பொய் அல்லது மூடநம்பிக்கை எனலாம்.
  • உண்மையில் இன்காக்னிட்டோ மோடு பயன்படுத்தும் போது உங்களது பிரவுசிங் தகவல்கள் ஏதும் லோக்கல் டிரைவினில் பதிவாகாது. ஆனால் உங்களது இண்டர்நெட் சேவையை கண்காணிப்பவர்களால் உங்களது பிரவுசிங் தகவல்களை பார்க்க முடியும்.
  • இன்காக்னிட்டோ மோடில் நீங்கள் மேற்கொள்ளும் பதிவிறக்கங்கள் (downloads),உங்களது லோக்கல் டிரைவினில் அப்படியே இருக்கும். இன்காக்னிட்டோ மோடினை 
  • விட்டு வெளியேறினாலும் பதிவிறக்கம் செய்தவை அப்படியே இருக்கும்.
  • இன்காக்னிட்டோ என்றால் மறைந்திருத்தல் என்றாலும் முழுமையாக மறைந்திருக்க முடியாது. கார்ப்பரேட்களின் கண்காணிப்பு குழுவினரால் நீங்கள் பயன்படுத்திய இணைய முகவரிகளைப் பயன்படுத்த முடியும். நீங்கள் பதிவு செய்த தரவுகளை மறைக்க முடியும் ஆனால் அவை கண்காணிக்கப்படுவதை நிறுத்த முடியாது.
  • இன்காக்னிட்டோ மோடு அல்லது பிரைவேட் பிரவுசிங்கில் எவ்வித கிளிட்ச் (பிழை) என்றாலும் உங்களது செஷன்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகின்றன. பெரும்பாலான கிளிட்ச் உங்களது பிரவுசிங் செஷன்களை உளவு பார்க்கலாம்.இன்காக்னிட்டோ மோடினை தனியார் இண்டர்நெட் மையங்களில் பயன்படுத்தலாம். முக்கியமாக உங்களது தனிப்பட்ட தரவுகள் அல்லது முக்கிய தரவுகளை பதிவு செய்ய நேரும் சேவைகளுக்கு இன்காக்னிட்டோ மோடினை சில நிமிடங்கள் பயன்படுத்தலாம்.
  • உங்களது கணினி இல்லாமல் வேறொருவர் கணினியை பயன்படுத்த நேரிடும் போது இன்காக்னிட்டோ மோடு பயன்படுத்தவது நல்லது.

Trick to Use Any Sim in your Dongle/Modem Without Unlocking!

- No comments


Here is the coolest way to use any sim card in your Blocked Modem. Suppose if you have bought Aircel Modem 1750 and not satisfied with that.

Here is the coolest way to use any sim card in your Blocked Modem.
Suppose if you have bought Aircel Modem 1750 and not satisfied with there service but you can't any other Sim Card in there Huwaei 1750E Modem because they blocked the firmware with Particular sim card and if you want to change/Update your Firmware or any kind of Unlocking will effect on your Modem's Warranty.
Well don't wary about your Modem warranty or any Damage because i have tested this methods with couple of modems. its 100% working without updating your firmware or Without loosing your Warranty.

How to Use Any SIM in Blocked Modem Without Unlocking:

1. Download & Install Latest Nokia PC Suite
2. Insert any SIM card in your Modem and Pluin into your PC
3. Modem will show an error- "INVALID SIM CARD"
4. Don't Wary Close your Modem's Software/Client
5. Run Nokia PC Suite
6. Click on Internet Option
7. Select your Modem as Phone Modem 8. Now Connect it will Connected Surely

Thursday, 7 July 2016

ரூ.251 ஸ்மார்ட்போன் இன்று முதல் விநியோகம்!

- No comments
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 251 ரூபாய் ஸ்மார்ட் போன்களை முன்பதிவு செய்தவர்களுக்கு இன்று முதல் விநியோகம் செய்யப்படவுள்ளன.
மிக குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன் ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம் அறிமுகம் செய்தது. அதற்கான முன்பதிவையும் ஆன்லைனில் துவக்கியது அந்த நிறுவனம். இடையில் வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியதால் முன்பதிவை ரிக்கிங் பெல்ஸ் நிறுவனம் நிறுத்தியது.
ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பேருக்கு, முதல்கட்டமாக பிரீடம் 251 போன்கள் விநியோகிக்கப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அரசின் உதவி கிடைத்தால் 251 ரூபாய்க்கு, 2 லட்சம் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 32 இன்ச் ஹச்.டி எல்.ஈ.டி டிவியையும் பத்தாயிரம் ரூபாய் விலையில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்துகிறது.

(Torrent)டொரண்ட், ஓர் அறிமுகம்!

- No comments
டொரண்ட் அப்படினு சொல்லப்படுறது என்னன்னா... "இணைய இணைப்பில் இருக்கும் சக கணினிகளுக்கு இடையேயான ஒரு வலையமைப்பை (peer to peer)ஏற்படுத்தி அதன் மூலம் கோப்புகளை பறிமாறிக்கொள்வது".
அடுத்து அந்த வலையமைப்பு எப்படி உருவாக்கப்படுது மற்றும் செயல்படுதுன்னு பார்க்கலாம். உதாரணத்துக்கு நீங்க ஒரு திரைப்படத்த டொரண்ட் மூலமா தரவிறக்கம் செய்றீங்கன்னு வச்சுக்குவோம்.. முதலில் நீங்க செய்ய வேண்டியது ட்ராக்கர் தளங்கள்/டொரண்ட் தளங்களுக்கு போய் தேவைப்படும் திரைப்படம் இருக்கான்னு தேடி கண்டுபிடிக்கனும். பிறகு அதற்கான டொரண்ட் கோப்பை (eg: nayagan_maniratnam.torrent) உங்க கணினிக்குத் தரவிறக்கம் செய்ங்க. டொரண்ட் கோப்புகள் அள்வில் சில kbக்கள் மட்டுமே இருக்கும்.
டொரண்ட் கோப்பில் என்ன இருக்கும்?.. டொரண்ட் கோப்புல ட்ராக்கர்(tracker) மற்றும் நீங்கள் தரவிறக்கம் செய்யப் போகும் கோப்புகளின் விவரங்கள் இருக்கும்.
ட்ராக்கர்னா என்ன? ட்ராக்கர் என்பது சர்வரில் இருக்கும் ஒரு நிரல், உங்களுக்கு படத்தை வழங்கப் போகிற சக கணினிகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் ட்ராக்கர் தான் பராமரிக்கும். நீங்க தரவிறக்கம் செய்யப் போற படங்கள் யார் யாரு கணினிகள்ல இருக்கு, மேலும் அவங்க கிட்ட முழுசா இருக்கா.. இல்ல படத்தின் சில பகுதிகள் மட்டும் இருக்கா.. உங்களைப் போலவே தரவிறக்கம் செய்ற சக கணினிகள் அப்படின்னு சகலமும் ட்ராக்கர் தெரிஞ்சு வச்சிருக்கும்.
இப்போ உங்க கிட்ட இருக்கிற டொரண்ட் கோப்பை ஏதேனும் ஒரு டொரண்ட் கிளையண்ட் (உ.தா: பிட்டொரண்ட், யுடொரண்ட்,ஏபிசி..) எனப்படும் மென்பொருள் கொண்டு திறக்கவும். திறந்தவுடன் தரவிறக்கம் செய்யப் போகும் கோப்பை உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் எங்கு சேமிக்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டும் அவ்வளவு தான் நம் வேலை, வெப்-சர்வரில் உள்ள ட்ராக்கரைத் தொடர்பு கொள்வது, சக கணினிகளின் விவரங்களைப் பெற்று அவற்றை உங்கள் கணினியுடன் இணைத்து, தரவிறக்கம் செய்வது இப்படி மற்ற அனைத்து வேலைகளையும் டொரண்ட் மென்பொருள் பார்த்துக்கொள்ளும்.
இதன் சுவாரஸ்யமே இந்த தரவிறக்கம் எப்படி நடைபெறுகிறது என்பது தான். அதற்கு முன் சில பெயர்கள் பற்றி அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சீடர்ஸ் (seeders) - நீங்க தரவிறக்கம் செய்யப் போற படத்தை முழுமையா தன் கணினில வச்சிருக்கிறவங்க.
பியர்ஸ் /ஸ்வார்ம்ஸ் (peers/Swarm) - உங்கள மாதிரியே படத்த தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் சக கணினிகள்.
ஒரு கற்பனைக்கு நீங்க ஒரு திரைப்படத்தோட கதைய உங்க நண்பர்கள் கிட்ட கேக்க போறீங்கன்னு வச்சிக்குவோம். ஆனா நிபந்தனை என்னன்னா ஒரே நேரத்துல அத்தனை நண்பர்களுமே கதை சொல்லுவாங்க. சில நண்பர்கள் படம் முழுசா பாத்துருப்பாங்க, சில பேரு கடைசிப்பகுதி மட்டும், சில பேரு நடுவுல மட்டும் கொஞ்சம், இன்னும் சில பேரு உங்கள மாதிரி கதை கேக்கவும் வந்துருப்பாங்க, இப்படி கலவையா ஒரே நேரத்துல உங்களுக்கு கதை சொல்லுவாங்க. ஒருத்தன் சொன்ன காட்சிய இன்னொருத்தன் சொல்ல மாட்டான். ஒரு வசதி என்னனா எத்தனை பேரு கதை சொல்லுறாங்களோ, அத்தனை காது உங்களுக்கு இருக்கும் (கற்பனை..கற்பனை). கதை சொல்லுறதுக்கு ஆள் அதிகமாக,அதிகமாக, உங்களுக்கு காதுகளும் கூடிட்டே போகனும். குறைந்த பட்சம் முழுப்படம் பார்த்தவர் ஒருவராவது இருக்கனும்.. உங்களுக்கு கதையின் பகுதிகள் கிடைக்க,கிடைக்க அதே நேரத்துல.. உங்கள மாதிரியே கதை கேக்க வந்த நண்பர்களுக்கும், உங்களுக்கு தெரிந்த பகுதிகள் பற்றி தெரியாத மற்ற நண்பர்களுக்கு நீங்களும் கதை சொல்ல ஆரம்பிக்கனும். உங்க கிட்ட எத்தனை பேர் கதை கேட்க இருக்கிறார்களோ அத்தனை வாய் உங்களுக்கு இருக்கும்.இப்படி எல்லாரும் சொன்னது எல்லாம் உங்க மூளைல பதிவானதும், அதுக்கப்புறம் நீங்க தனியா எல்லாத்தையும் சேர்த்துப் பார்த்தா உங்களுக்கு முழுக் கதையும் கிடைக்கும்.

இதுல முழுக் கதை தெரிஞ்சவங்க எல்லாரும் சீடர்ஸ் (seeders). நீங்களும், உங்கள மாதிரி கதை கேக்குற/சொல்லுற எல்லாரும் பியர்ஸ்/ஸ்வார்ம்ஸ் (peers/swarms).
இதுல எல்லாருக்கும் ஒரு தார்மீகக் கடமை இருக்கு.. என்னன்னா முழுசா கதை கேட்டவங்க எல்லோரும் மத்தவங்களும் கொஞ்ச நேரமாச்சும் கதை சொல்லிட்டு போகனும் (seeding). அப்படி இல்லாம சுயநலமா தனக்கு முழுக்கதையும் தெரிஞ்சவுடனே ஓடிப் போறவங்கள தான் லீச்சர்ஸ் (leechers) அப்படின்னு சொல்றாங்க.
டொரண்டோட சிறப்பு என்னனா.. இப்படி ஒரே நேரத்துல கொடுக்கல்/வாங்கல் இரண்டுமே சகட்டு மேனிக்கு எவ்வளவு பெரிய கோப்பையும் எளிதா தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே போல் நீங்களும் மற்றவர்களுக்கு கூடுமானவரை தரவிறக்கம் செய்து முடித்த பின்பும், சீட் (seed) செய்து புண்ணியம் பெறலாம்.
வேகம்: இதன் தரவிறக்க வேகம் எப்படி இருக்கும்? எவ்வளவு கூட்டம் (seeders/peers) இருக்கிறதோ அவ்வளவு வேகம் இருக்கும்.

மக்களால அதிகமா தரவிறக்கம் செய்யப்படுற மற்றும் அளவில் மிகப்பெரிதான கோப்புகளுக்கு டொரண்ட் ஓர் அற்புதமான தொழில்நுட்பம்.அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராம் கொஹன் தான் இதன் படைப்பாளி.
அடுத்த பாகத்தில் ட்ராக்கர் தளங்கள், அவர்கள் எப்படி பயனாளர்களைக் கட்டுப்படுத்துகின்றனர், டொரண்ட் கிளையண்ட் மென்பொருட்களை எப்படி பயன்படுத்துவது, எப்படி டொரண்ட் கோப்புகளை நீங்களே உருவாக்குவது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் :D 


Wednesday, 6 July 2016

Laptop புதிதாக வாங்க போறிங்களா? உங்களுக்காக சில டிப்ஸ்...

- No comments
மடிக்கணினி கம்பெனி வகைகள்: 

• Acer
• Apple
• ASUS
• Dell
• HP
• Lenovo
• Samsung
• Sony
• Toshiba

நீங்கள் வாங்கப்போகும் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்...

Laptop Configuration

விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு(உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்குங்கள்)

Processor

பிரசசர் திறனுக்கு தகுந்தாற்போல மதிப்பு இருக்கு மல்ட்டிமீடியா வேலை என்றால் Intel Core i7 பிரசசர் நல்லது.

Intel Core i7
Intel Core i5
Intel Core i3
என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்குங்கள்.
சாதாரண அலுவலக பயன்பாட்டுக்கு அல்லது படிப்பதற்க்காக வாங்க எண்ணினால் Intel Core i3 5th Generation போதுமானது.

RAM

(4 GB RAM இருந்தால் சிறந்தது 8GB இருந்தால் ரொம்ப நல்லாருக்கும்) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள்.

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).
மிகவும் முக்கியம் ... கவனித்து வாங்கவும்
RAM -2GB + 2GB or 1GB+3GB (4GB) அல்லது 8GB RAM வாங்க நினைத்தால் 4GB+4GB என்று பிரிந்து இருந்தான் நல்லது .

Hard Disk

SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.


உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 1 TB இருக்கவெண்டும்.

கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

SSD ஹார்ட் டிஸ்க் வாங்கினால் துரித வேகத்தில் இயங்கும். விலை சற்று அதிகம் என்பதால் உங்கள் பட்ஜெட்க்கு தகுந்தவாறு தேர்ந்தெடுங்கள்.


DVD DRIVE

பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.


Battery

6 செல் லித்தியம் ஐயன் பேட்டரி (இயன்றால் 9-cell மின்கலம்/battery வாங்க முயற்சிக்கவும்.) நெடும் பயணத்தின் போது(தமிழ் நாட்டில் அனைவருக்கும் ) அவை பெரிதும் பயன்படும்.

battery ,குறைந்தது 1 முதல் 3 ஆண்டுகள் சிறப்பாக உழைக்கும். ஆனால் எந்தக் கம்பெனியும் ஒரு வருடத்திற்கு மேல் உத்திரவாதம் தருவது இல்லை.


சேவை மையம்

அங்கீகாரம் பெற்ற சேவை மையம் எங்கு உள்ளது என விசாரித்து தெரிந்து கொள்ளவும்.

விலை: 20000 ரூபாய் முதல் லேப்டாப் கிடைக்கிறது. ஆனால் நினைவிருக்கட்டும், Laptopஐ பொருத்தவரை விலை குறையக்குறைய தரம் மற்றும் வேகம் (பிராசசர்) குறைவாக இருக்கும்.


VDO Card/Graphic Card

அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக

நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது
Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக capacity உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான
மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால்
அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் error ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்

Photoshop , coreldraw5 மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் போதும்.

LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

 மற்ற தொழில்நுட்ப அம்சங்கள் எல்லா லேப்டாப்லும் போதுவானது என்பதால் அவற்றை தவிர்த்து விடுகிறேன் (Bluetooth,WiFi, Memory Card Reader Slot, Webcam, Face-Recognition, Finger Print Reader பார்க்கும் லேப்டாப் என்பது பெருமை அடித்துக்கொள்ள உதவும் என்பது என் கருது அவ்வளவே .மிகவும் இன்றியமையாதா தேவை அல்ல)

நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

ஆன்லைனில் வாங்கினால் ஒரிஜினல் கிடைக்கும், நீங்கள் கடைகளில் வாங்கும் போது தகுந்த முன் எச்ச்சரிக்கையோடு வாங்குங்கள். பெரும்பாலும் நீங்கள்தான் OS இன்ஸ்டால் செய்துக்கொள்ள வேண்டும்.

இப்போதைக்கு அதிகம் விற்பனையாகும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட Laptopகளின் லிஸ்ட்

Click Here to Find Most Popularity Laptop's

Tuesday, 28 June 2016

பான் கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?

- No comments
ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம்.
பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறை பதிவு செய்யப்படுவதால் இதனை உடனடியாகத் திருத்துவது சாலச்சிறந்தது. இதனை நீங்கள் எளிமையாக ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் பான் கார்டு முகவரியைத் திருத்தும் வழிகள். இதுதோ உங்களுக்காக.. அந்த இணைய முகவரிக்குச் சென்று PAN Data Request Form என்ற தொடர்பில் மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பான (changes or correction) வசதியை பயன்படுத்த வேண்டும்.


இந்த விண்ணப்பத்தில் 'update communication address' என்ற கோரிக்கையில் டிக் செய்ய மறந்து விடாதீர்கள்.உங்கள் பான் கார்டில் உள்ள விவரங்களில் செய்யவேண்டிய மாற்றங்களுக்கு விண்ணப்பத்தில் அனைத்து கட்டாய விவரங்களையும் (* குறியிடப்பட்ட விவரங்கள்) பூர்த்தி செய்து மாற்றம் தேவையான இடங்களில் எதிரே இடது புறம் கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் தேர்வு (செலக்ட்) செய்யவேண்டும்.
உங்கள் தொடர்பு முகவரி இந்தியாவிற்குள் இருந்தால் பான் கார்டை அனுப்ப ரூபாய் 105 செலுத்த வேண்டும் (93 ருபாய் மற்றும் 12.36 சதவிகிதம் சேவை வரி).
கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட், காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது இணைய வங்கிதளம் மூலமாகச் செலுத்தலாம். கிரெடிட் கார்டு உபயோகத்திற்கு 2 சதவிகித கூடுதல் கட்டணம் உண்டு.
கட்டணம் செலுத்துகை முடிந்த பிறகு அதற்கான ரசீது (acknowledgement) திரையில் தெரியும். அதனை நீங்கள் உங்கள் கணினியில் பதியவோ அல்லது பிரிண்ட் செய்தோ வைத்துக்கொள்ளலாம்.
தனி நபர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் இடதுபுறத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களுடைய அண்மையில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களை ஒட்டி பாதிப் புகைப்படத்திலும் பாதி விண்ணப்பத்தில் வருமாறும் கையொப்பமிட வேண்டும்.
இந்த ரசீது அல்லது விண்ணப்பத்தைப் புகைப்படத்துடன் கையொப்பமிட்ட பின்னர் (தனி நபர்களுக்கு மட்டும்) அதனுடன் கட்டணத்திற்கான டிடி அல்லது காசோலை (ஆன்லைனில் செலுத்தாதமல் நேரடியாகச் செலுத்த விரும்புவோர்) மற்றும் தற்போதுள்ள பான்கார்டின் நகல், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றிற்கான அடையாளச்சான்று ஆகியவற்றுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

NSDL e-Governance Infrastructure Limited, 5th floor,
Mantri Sterling, Plot No. 341,
Survey No. 997/8, Model Colony,
Near Deep Bungalow Chowk,
Pune - 411016'.
பின் குறிப்பு: நீங்கள் அனுப்பும் விண்ணப்ப கவரின் மீது 'APPLICATION FOR PAN CHANGE REQUEST-Acknowledgment Number' என்று குறிப்பிடவும் (உதாரணம்: APPLICATION FOR PAN CHANGE REQUEST-881010200000097).


💀எச்சரிக்கை – ஆபாசப்படம் பார்க்கும்போது பேஸ்புக்கை அவசியம் லாக்-அவுட் செய்யுங்கள்..!

- No comments
முன்னேற்றம் எந்த விதமான துறையையும் விட்டுவைக்கவில்லை. பாலுணர்வுக் கிளர்ச்சியம்’ அதாவது பார்னோகிராஃபி (Pornography) என்பது சரியானதா..? தவறானதா..? என்று விவாதம் செய்வதால் எதுவும் இங்கே மாறிவிடப் போவதில்லை என்பது உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்.
அதனால், ஆபாசப்படம் பார்க்கும்போது ஏன் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை எப்போதுமே லாக்-அவுட் செய்ய வேண்டும் விளக்கம் கொடுத்து விடுகிறோம்..!

லாக்-இன் :
இண்டர்நெட்டில் ஆபாசப்படங்கள் பார்க்கும் போது உங்கள் முகநூல் அக்கவுண்ட் லாக்-இன்’னில் இருந்தால் நீங்கள் டிராக் செய்யப்படுவீர்கள்..!

நடத்தை :
உங்கள் முகநூல் அக்கவுண்டின் பேஸ்பூக் ப்ளக்டு-இன் பட்டன், லைக் பட்டன், ஷேர் பட்டன் போன்ற அம்சங்களில் இருந்து கொண்டு நீங்கள் ஆபாச வலைதளத்தில் இருந்தால் உங்கள் நடத்தை கண்காணிக்கப்படும்.

லைக் மற்றும் ஷேர் :
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு லைக் மற்றும் ஷேர் பட்டன்கள் அதனை பயன்படுத்தும் மக்களை கண்காணிக்காது என்று உறுதியளிக்கப்பட்டது ஆனால் இப்போது அது மாறிவிட்டது.

தகவல்கள் :
“விளம்பரங்களை இலக்குகளாக வைத்து மக்களின் சமூக விடயங்களை கண்காணிக்க மாட்டோம், மேலும் சேகரிக்கப் படும் தகவல்கள் எல்லாமே 90 நாட்களில் அழிக்கப்பட்டுவிடும். பணத்திற்காக விற்கப்படமாட்டாது” என்று 2001 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதிகள் தற்போது காணாமல் போய் உள்ளன.
ட்ராக் :
தற்போது உங்களை ‘ட்ராக்’ செய்வது மட்டுமின்றி உடன் நீங்கள் எந்த வலைதளத்தில் உள்ளீர்கள், எவ்வளவு அதிகமாக குறிப்பிட்ட வலைதளத்தில் உள்ளீர்கள் என்பதை வைத்து உங்கள் நடத்தையையும் சேர்த்து கண்காணிக்கின்றனர்.

புதிய தனியுரிமை கொள்கை :
சமீபத்தில் புதிய தனியுரிமை கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது அதில் “எங்களின் சேவையின் கீழ் உங்களுக்கு கிடைக்கும், நீங்கள் பார்வையிடும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களின் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்துமே சேகரிக்கப்படும் :
அதாவது நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள் மற்றும் ஆப்ஸ் பற்றிய தகவல், அந்தந்த வலைத்தளங்கள் மற்றும் ஆப்ஸ்களில் நீங்கள் பயன்படுத்தும் எங்கள் சேவைபற்றிய தகவல்கள், உடன் உங்களுக்கு சேவை வழங்கும் வலைத்தளங்களின் டெவெலப்பர் மற்றும் பப்ளிஷர் விவரங்கள் என அனைத்துமே சேகரிக்கப்படும்.

வகை :
முக்கியமாக ஆபாச வலைத்தளங்கள் மட்டும் கண்காணிக்க படுவதில்லை, நாம் அணுகும் அனைத்து வகையான வலைத்தளங்கள் மற்றும் ஆப்ஸ்களும் கண்காணிக்கப்படுகிறது என்பது குறிப்பித்தக்கது.

மறுபக்கம் :
நிறுவனத்தின் ப்ரைவசி பாலிசிகள் இவ்வளவு சீக்கிரம் நிலையை மாற்றிக் கொள்கின்றன என்பது சற்று தொந்தரவாக இருக்கிறது என்பது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் நுகர்வோர்கள் மற்றும் பயனாளிகள் அனைவரும் தெளிவாக செயல் பட வேண்டியதும் நிதர்சனம் தான்.

Monday, 27 June 2016

10ஜிபி 4ஜி டேட்டா ரூ.93 மட்டுமே, ஜியோ அதிரடி.!!

- No comments
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது 4ஜி சேவையை வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி அந்நிறுவனம் தனது சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நெட்வர்க் பயன்படுத்தி 4ஜி சேவைகளை வழங்கவும், முதற்கட்டமாக சுமார் 10ஜிபி 4ஜி டேட்டாவினை ரூ.93க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு அந்நிறுவனம் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..   அடுத்த வாரம் முதல் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 4ஜி நெட்வர்க் பயன்படுத்தி சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.4ஜி சேவைக்கு அப்கிரேடு செய்ய ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்தச் சலுகையை பயன்படுத்தத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பிடிஐ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 80 லட்சம் RCom சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களில் சுமார் 90% பேர் 4ஜி சேவைக்கு அப்கிரேடு செய்ய முன்பதிவு செய்திருப்பதாகவும் அந்நிறுவன தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில் 10 ஜிபி 4ஜி டேட்டாவினை ரூ.93 வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்சமயம் சந்தையில் கிடைப்பதில் மிகக்குறைந்த விலையில் 4ஜி சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கின்றது.

ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்ப ரூ.93 முதல் ரூ.97 வரை 10ஜிபி 4ஜி டேட்டாவின் கட்டணங்கள் மாறுபட வாய்ப்புகள் இருக்கின்றதாக RCom இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட 4ஜி சேவைகளை வழங்க மும்பை, தில்லி, கொல்கத்தா, குஜராத், ஆந்திர பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், கிழக்கு மற்றும் மேற்கு உத்திர பிரதேசம், மத்திய பிரதேஷ் மற்றும் பீகார் உள்ளிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அந்நிறுவனம் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் அனுமதி பெற்று ஜூலை மாத இறுதியில் 4ஜி சேவையை வழங்க இருக்கின்றது...

Thursday, 23 June 2016

5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!

- No comments
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும். அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.


ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.


2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.

ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்

நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்

Tuesday, 3 May 2016

ஆன்ராயிடு போன் மூலம் வைபை நெட்வொர்க்-ஐ ஹேக் செய்வது எப்படி?

- No comments
பெரும்பாலும் ஹேகிங் செயலிகளை எமது போனில் பயன்படுத்த வேண்டும் என்றால், எமது போன் ரூட் செய்யப்பட்டிருத்தல் அவசியமாகும்.
ஆனால் இந்த முறை ரூட் செய்த மற்றும் ரூட் செய்யப்படாத என்று இருவகையான போன்களிலும் செயட்படக்கூடியவாரான ஒரு செயலியுடன் வந்து இருக்கிறேன். ஆனால் உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருந்தால், இந்த ஹேகிங் முறையின் உச்ச பயனை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்படித்தக்கது.
சரி.. உங்களுடைய ஆன்ராயிடு போனில் இருந்தபடியே குறித்த ஒரு வைபை நெட்வொர்க்-ஐ ஹேக் ரிக்வஸ்ட்களை அனுப்புவது எப்படி என்று பார்ப்போம்.
முதலாவதாக கீலே தறபட்ட்டிருக்கும் ஆன்ராயிடு வைபை ஹெகிங் செயலியின் புதிய பதிப்பை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள். உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருந்தால், ரூட் அனுமதி கேட்கும். அப்படியில்லை என்றால், 'நோ ரூட்'-ஐ கிளிக் செய்து செயலிக்குள் நுழையுங்கள்.
அடுத்து உங்களது போனில் வைபை-ஐ ON செய்து, இந்த செயலியில் காணப்படும் ஸ்கேன் வசதி மூலம் வைபை நெட்வொர்க்-களை ஸ்கேன் செய்திடுங்கள்.

ஆகவே மிகவும் இலகுவான முறையில் வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்ய உதவும் இந்த ஆன்ராயிடு வைபை ஹெகிங் செயலியின் புதிய பதிப்பை
கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் ப்லே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியின் பதிப்பில் அதிகபடியான விளம்பரங்கள் வந்து தொல்லை தருகின்றன. ஆகவே இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு தரவிறக்கி கொள்ள முடியும்.
,இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

     Link: Andro Dumpper.apk

Thursday, 28 April 2016

150 ருபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு போனுக்கான மிகச்சிறந்த போட்டோ எடிட்டிங் செயலி(App) இலவசம்.

- No comments
சமூக வலைத்தளங்களுக்கு நாம் எமது போடோக்களை பதிவேற்றும் போது, வெறும் போட்டோகளாக மட்டும் பதிவேற்றாமல் அதற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் குறித்த போட்டோவை எடிட் செய்து பதிவேற்றுவது அனைவரினதும் வழக்கம்.
ஆனால் எமது போட்டோகளை அழகிய முறையில் எடிட் செய்து கொள்ள வேண்டும் என்றால் கணணி ஒன்று இருக்கும் பட்ச்சத்திலேயே மிகச்சிறந்த முறையில் எடிட் செய்து கொள்ள கூடியதாய் இருக்கும்.ஆனால் நீங்கள் கணனியில் இல்லாமல் போனில் இருந்து போட்டோகளை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகிரீர்கள் என்றால் இதோ உங்களுக்கோர் அருமையான போட்டோ எடிட்டிங் செயலி (ஆன்ராயிடு).
இந்த ஆன்ராயிடு போட்டோ எடிட்டிங் செயலி மூலம் நீங்கள் கணனியில் இருந்து போட்டோ ஒன்றை எடிட் செய்தால் எந்த அளவு தரம் மிக்கதாக இருக்குமோ அதே அளவு தரத்துடன் ஆன்ராயிடு போனில் இருந்து போட்டோகளை எடிட் செய்து கொள்ள கூடியதாய் இருக்கும்.
இந்த போட்டோ எடிட்டிங் செயலியின் தனிச்சிறப்பு மிக்க வசதிகளாக, குறித்த ஒரு போட்டோவில் இருக்கும் குறித்த ஒரு பகுதியை மட்டும் மறைக்க உதவுவது, அழகிய லைட் எபெக்ட்-களை சேர்த்து கொள்வது என்று சிறந்த பல எடிட்டிங் வசதிகளை குறிப்பிடலாம்.
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்க்ம் ஆன்ராயிடு போட்டோ எடிட்டிங் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, குறித்த போட்டோ ஒன்றை தெரிவு செய்து உங்கள் விருப்பம் போல எடிட் செய்து கொள்ள முடியும்.
நிற எபெக்ட்-களை ஏற்படுத்தும் வசதி.
போட்டோ வில் இருக்கும் குறித்த ஒரு பகுதியை மறைக்கும் வசதி.
இவை தவிர இன்னும் பல சிறந்த வசதிகளை இந்த செயலில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
ஆன்ராயிடு போனுக்கேன்றே மிகச்சிறந்த போட்டோ எடிட்டிங் வசதிகளுடன் அறிமுகமாகி இருக்கும் இந்த போட்டோ எடிட்டிங் செயலி கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக கிடக்கும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன.
ஆகவே இந்த போட்டோ எடிட்டர் செயலியின் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ப்ரீமிஅம் பதிப்பை எப்படி இலவசமாக பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.

Click here : Photo editing App

Sunday, 3 April 2016

ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி?

- No comments


Election website link:  http://www.elections.tn.gov.in/


Saturday, 2 April 2016

ஆண்ட்ராய்டு ரூட்(Root) என்றால் என்ன? ரூட் பற்றிய முழு தகவல் !

- 1 comment



ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் காணப்படும் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று தான், ஆன்ராயிடு ரூடிங் என்றால் என்ன? ரூட் செய்வது எப்படி? ரூட் சென்வதன் நன்மை தீமைகள் என்ன என்பதாகும்.  இன்றைய பதிவில் ஆன்ராயிடு ரூடிங் சம்மந்தமான அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொள்ள போகிறேன். இந்த பதிவில் ரூடிங் சம்மந்தமான கீழ்வரும் விடயங்களை பற்றி விளக்கமாக பார்ப்போம்.

  1. ஆன்ராயிடு ரூடிங் என்றால் என்ன? 
  2. ரூட் செய்வதன் நன்மை தீமைகள் என்ன?
  3. உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்வதால் என்னவெல்லாம் செய்து கொள்ள முடியும் ? 
ஆன்ராயிடு ரூட்டிங் என்றால் என்ன?

Android ரூட்டிங் என்றால், உங்களது Android  ஸ்மார்ட் போனிட்கான Super User Access-ஐ வழங்குவதாகும்.
அதாவது சாதாரண நிலையில் இருக்கும் உங்களது Android ஸ்மார்ட் போனை ரூட் செய்வதன் மூலம், பல்வேறுவகையான வசதிகளை செய்து கொள்ள முடியும். உங்களது Android போனிற்கு எதுவெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இருந்தீர்களோ, அவற்றில் பெரும்பாலான சேவைகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும். உதாரணமாக Custom Software (ROM’s) வசதி, Custom Themes, வேகமான செயல்பாடு, அதிகரிக்கும் பேட்டரி நீடிப்பு, OS Upgrade என்று மேலும் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும்.
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் போனை நீங்கள் ஹாக் செய்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.

ரூட்டிங் -ன் நன்மைகள் என்ன ?
Custom Software (ROM’s)
ROM ஆனது Android போனை இயக்க உதவும் ஒரு சேவை ஆகும். உங்களது Android ஸ்மார்ட் போனில் Default ஆக இருக்கும் ROM -ஐ மாற்றும் வசதி சாதாரண போன்களில் கிடையாது. ஆனால் உங்களது போனை ரூட் செய்வதன் மூலம் Custom ROM வசதியை மேம்படுத்தி கொள்ளும் வசதி கிடைக்கும். இதன் மூலம் OS Upgrade வசதியை நமக்கு பெற்று கொள்ள முடியும்.
Custom Themes:
Android ஸ்மார்ட் போனுக்கு ஏற்கனவே Default ஆக உள்ள தீம் இல்லாமல் உங்கள் தேவைக்கேற்ப தீம்-ஐ மாற்றும் வசதியை பெற்று கொள்ள முடியும்.
போனின் வேகம் மற்றும் பேட்டரி பயன்பாடு அதிகரிக்கும்.
ரூட் செய்து கொள்வதன் மூலம் உங்களது ஸ்மார்ட் போனின் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும். அதே போல் உங்களது பேட்டரி பாவனை நேரத்திலும் முன்னேற்றம் தெரியும்.
இவைகள் தவிர WiFi and USB tethering மற்றும் Simple Backup Solution போன்ற உபயோகமுள்ள வசதிகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும்.

ரூட் செய்வதன் தீமைகள் என்ன?
உங்களது Android போனை ரூட் செய்வதால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை தான், உங்களது ஸ்மார்ட் போனிட்கான வாரண்டி கிளைம் செய்ய முடியாமல் போவது.
அடுத்து சில Android ஸ்மார்ட் போன்களில் ரூட் செய்வதனால் ஒரு சில செயலிகள் இயங்க மறுக்கலாம். இந்த பிரச்சினை ஏற்படுவது மிகவும் அரிது. இருந்த போதிலும் ரூட் செய்ய முன்னர் நீங்கள் இதை பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே கூறுகிறேன்.
Android மார்க்கெட் செயலிகள் அல்லாத செயலிகள் ஸ்மார்ட் போனில் நிறுவ முடியும் என்பதால், இணைத்தின் மூலம் வைரஸ் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இதை நீங்கள் தவிர்க்க
வேண்டுமானால் சிறந்த ஒரு வைரஸ் காப்பு செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி இருத்தல் வேண்டும்.

ரூட் செய்ய முன் உங்களது போனில் செய்ய வேண்டியவை.
அடுத்து, உங்களது போனை ரூட் செய்ய முன்னர், போனில் என்னவெல்லாம் செய்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாக பார்ப்போம்.
ஒரு சில ரூடிங் முறைகள் மூலம் உங்களது போனை ரூட் செய்வதால், உங்களது போனில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழிந்து போக வாய்ப்பு உள்ளது. ஆனால் இது அனைத்து ரூடிங் முறைகளுக்கும் பொருத்தம் இல்லை. நான் எனது போனை ரூட் செய்யும் போது, எது விதமான டேட்டாகளும் அழியவில்லை. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கையாக ரூட் செய்ய முன்னர், உங்களது போனில் இருக்கும் அனைத்து பைல்-களையும் பேக்கப் எடுத்து வைத்து கொள்வது பாதுகாப்பனதாகும்.

போன் பேட்டரி சார்ஜ்-ஐ 80%-க்கு அதிகமாக வைத்து கொள்ளுங்கள்.
ஆன்ராயிடு போனை ரூட் செய்வதற்கு குறைந்தது 5 முதல் 15 நிமிடம் வரை எடுக்கும். ஆகவே ரூட் ப்ராசெஸ் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் உங்களது போனில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால், சிஸ்டம் பைல்-களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே உங்களது போனில் குறைந்தது 80% ஆவது சார்ஜ் இருக்க வேண்டும்.

சாதாரண வேகத்துடன் கூடிய தடையில்லாத இன்டர்நெட் இணைப்பு
ரூட் செய்யும் போது சில சிஸ்டம் பைல் மோடிபிகேசன்-கள் நடைபெறும். ஆகவே இதை செய்து கொள்ள உங்களது போனில் இன்டர்நெட் இணைப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மேலும் குறித்த இன்டர்நெட் இணைப்பு தடையில்லாமல் தொடர்ந்து செயட்படகூடிய இன்டர்நெட் இணைப்பாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் ரூட் ப்ராசெஸ் நடைபெறும் போது சிஸ்டம் எரர்-கள் வரும் வாய்ப்பு குறைவடையும்.

ரூட் செய்யும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் என்ன செய்வது?
ரூட் செய்யும் போது சிஸ்டம் அளவில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், எம்மால் எதுவுமே செய்ய முடியாது. அவ்வாறான சூழ்நிலை ஒன்றில், உங்களது போனை கஸ்டமர் சர்வீஸ் செண்டர் ஒன்றிற்கு எடுத்து சென்றே திருத்தி கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படியல்லாமல், ரூட் செய்யமுடியவில்லை. ரூட் எரர் என்ற செய்திகள் வருமேயானால், உங்களது போனை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் போனை பழைய நிலைக்கு திரும்ப பெற்று கொள்ள முடியும்.
சரி.. இப்போது முக்கியமான பகுதிக்கு வருவோம்..
ரூட் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்வது எப்படி?
பெரும்பாலும் உங்களுடைய போன் ரூட் செய்யப்பட்டதும் குறித்த செயலியில், ரூட் சரியாக செய்யப்பட்டது என்ற வாசகம் தோன்றும். அது தவிர, கீழ்வரும் சிறப்பு செயலி மூலம் கூட உங்களது ஆன்ராயிடு போன் சரியாக ரூட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளமுடியும்.

அன்-ரூட் செய்வது எப்படி?
சரி.. இறுதியாக என்னுடைய போனுக்கு ரூட் தேவையில்லை என்று நினைப்பவர்கள் எப்படி ரூட்-ஐ இல்லாமல் செய்து கொள்வது என்று பார்ப்போம். இந்த வேலையை மிக இலகுவாக ஒரு சில கிளிக் -களில் செய்து முடிக்க உதவுகிறது Androidஅன்-ரூட் செய்வதற்கான கீழ்வரும் சிறப்பு செயலி.
இந்த செயலியை தரவிறக்கி உங்களது போனில் நிறுவி கொள்ளுங்கள்.
அடுத்து ரூட் செய்யப்பட்ட உங்கள் போனில் இந்த செயலியை ஆரம்பித்து கீழே காட்டியுள்ளவாறு செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லுங்கள்.
அதிலே Full Unroot என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்களது Android ஸ்மார்ட் போன் அன்-ரூட் ஆக தயாராகி விட்டது.உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்து விட்டேன் என்று நினைக்கின்றேன். மேலே குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி உங்களது ஆன்ராயிடு போனையும் மிக இலகுவாக ரூட் செய்திடுங்கள்.

Links:
                1)  iroot for windows

                2)  Root checker.apk

                3)  Unroot.apk