Sample Text

Theme images by Storman. Powered by Blogger.

Search This Blog

Pages

Friday, 23 December 2016

பலரும் தெறிந்திறாத பேஸ்புக்கில்(facebook) மறைந்துள்ள ரகசியங்கள்!

இப்ப இருக்குற நெருக்கடியான சூழ்நிலைல, நம்மள நிம்மதியா வச்சுக்குற ஒரே விஷயம் ஃபேஸ்புக் தான்.சில சமயங்கள்ல அவஸ்தை பட வைக்கிறதும் அதுதான். இப்படிப்பட்ட ஃபேஸ்புக்கிற்கு பலம் சேர்க்க இன்னொரு விஷயமும் இருக்கு. எல்லாம் தெரியும்னு நினைச்சா தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கும். அப்படி உங்களுக்கு தெரியாத ஃபேஸ்புக் ரகசியங்கள் ஆறு சொல்றோம் வாங்க பாஸ்.

1) நம்மள கூட்டணில சேக்காதவன் யாரு?
ஃப்ரெண்டு ரெக்வெஸ்ட் அனுப்பியும், உங்கள கூட்டணில சேர்க்காதவன்லாம் யாருன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அவங்களை எல்லாம் பாக்கணும், அல்லது அந்த ரெக்வெஸ்ட்ட கேன்சல் பண்ணனும்னு தோணுமில்ல.. இதான் பாஸ் வழி.ஃபேஸ்புக்க திறங்க. சில விஷயத்துக்கு ஆப் உதவாது. வெப்ல தான் திறக்கணும்
friend request tab க்ளிக் பண்ணுங்க.
அதுல ‘See all’ ந்னு கீழ இருக்கும். அது மேல ஒரு க்ளிக்
இப்ப நமக்கு மனு போட்டவங்க பேரெல்லாம் வரும். அது இருக்கட்டும். ‘view sent requests’ ந்னு ஒண்ணு இருக்கும். அத க்ளிக் பண்ணா, நமக்கு நேக்கா டேக்கா கொடுத்தவங்க லிஸ்ட் வரும்.
இனி அவங்கள என்ன செய்யணுன்றது உங்க இஷ்டம். அதனால இந்த பாயின்ட் இஸ் யுவர்ஸ்

2) ஃபுட்பால் விளையாடி இருக்கீங்களா?
கெட்டது இருக்கட்டும் பாஸ். ஃபேஸ்புக்ல ஃபுட்பால் விளையாடி இருக்கீங்களா?     
                 தம்மாத்துண்டு கேம் தான். ஆனா வாரம் முழுக்க விளையாடலாம். தெரியுமா? யூரோ2016க்காக மார்க் ரெடி பண்ண கேம். இந்த ஃபுட்பாலை கைகளால் விளையாட நீங்க செய்ய வேண்டியதெல்லாம்…முதல்ல உங்க மெசெஞ்சர் அப்டேட்டட் வெர்ஷனான்னு பாத்துக்கோங்க.எமோஜி லிஸ்ட்ல இருந்து ஃபுட்பால் எமோஜியை உங்க ஃப்ரெண்டு யாருக்காவது அனுப்புங்க. மேனேஜர் மாதிரியான வில்லன்களா இல்லாம பாத்துக்கோங்க.எமோஜி போனதும், அது மேல க்ளிக் பண்ணுங்க. கேம் ரெடி.
                     இனி நீங்க அடிக்கிற ஸ்கோர் எல்லாம் அந்த ஃப்ரெண்டுக்கும் அப்டேட் ஆயிடும். அதனால, நீங்களே ஒரு ஃபேக் ஐடி ரெடி பண்ணி, அதுக்கு அனுப்புறது பாதுகாப்பான வழிமுறைன்னு பாக்தாத் அரசரே சொல்லியிருக்காரு.

3) ஓடியாட வேணாம்... செஸ் ஓக்கேவா?
ஃபுட்பால் எல்லாம் ஆகாது. வீடியோகேம்னாலும் உட்கார்ந்து விளையாடுற மாதிரி வேணும்னு நினைக்கறீங்களா? உங்களுக்காகவே செஸ் கூட வச்சிருக்குது ஃபேஸ்புக்.
முதல்ல உங்க மெசெஞ்சர் அப்டேட்டட் வெர்ஷனான்னு பாத்துக்கோங்க.
யார் கூட விளையாடணுமோ அவங்க கூட சாட் விண்டோ திறந்துக்கோங்க.
”@fbchess play” டைப் செஞ்சு அனுப்புங்க.. செஸ் போர்டு ஓப்பன் ஆகிடும்.

4) லைக் பண்ணுங்க. ஆனா...!
“நீ எப்படி அபிநயாவுக்கு லைக் போடலாம்”ந்னு உங்க கேர்ள் ஃப்ரெண்டு சண்டை போடுறப்ப உங்க மனசுல என்ன ஓடும்? “நமக்கு நாம லைக் போட்டதே தெரியாது. இதுல இவளுக்கு அடுத்தவங்க லைக் போடுறதெல்லாம் எப்படி தெரியுது”ந்னுதான? மார்க் எல்லாத்துக்கும் மார்க்கம் வச்சிருக்காரு பாஸ். வாங்க சொல்றேன்.
”Photos liked by……” இந்த புள்ளி இருக்கிற இடத்துல யார பத்தி விசாரிக்கறீங்களோ அவங்க பேர டைப் பண்ணி , சர்ச் பாக்ஸுல தேடுங்க. வரிசையா வந்துடும். “நீ போட்ட லைக்க காட்டு. நீ யார் என்பதை சொல்கிறேன்னு” ஏபிஜே… வேணாம்.. யாரோ சொல்லியிருக்காங்க பாஸ். அதனால இனிமேல லைக் போடுறப்ப, ரோடு கிராஸ் பண்ற மாதிரி டக்குன்னு பண்ணாம, 100ரூ நோட்டை செலவு பண்ற மாதிரி நிண்ணு, நிதானமா பண்ணுங்க.
இதே மாதிரி நீங்க போட்ட லைக்ஸை நீங்களே பாக்கணும்ன்னா Photos liked by me டைப் பண்ணுங்க.

5) லாக் ஆஃப் பண்ண மறந்துட்டீங்களா?
அவசரத்துக்கு பக்கத்து வீட்டுல காப்பி தூள் வாங்குற மாதிரி இப்பலாம் மொபைலோ, லேப்டாப்பையோ கூட வாங்குறாங்க. ஃபேஸ்புக் லாக் இன் பன்ணி நாலு லைக்ஸ் போட்டு, நமக்கு வந்த அஞ்சு லைக்க பாக்குறதுல அப்படி ஒரு சொகம். ஆனா பாருங்க பிள்ளைவாள்... திரும்ப கொடுக்கறப்ப லாக் ஆஃப் பண்ண சில சமயம் மறந்திடுவோம். அப்ப என்ன செய்றது?
பயப்படாம Settings-Security- Where You're Logged In -அதுல எந்த லாக் இன் வேணாமோ, அதுல ‘end activity கொடுத்துடுங்க. உங்க எல்லா கடலை சாட்களும் பத்திரமா அவங்க கண்ணுல படாம பாதுகாத்திடலாம்.

6) சேவ் பண்ணி வைங்க!

அவசரமா டைம்லைன ஸ்க்ரோல் பண்ணிட்டு இருப்போம். அப்பன்னு பாத்து நாலு எம்பி சைஸ்க்கு ஒரு நல்ல ஸ்டேட்டஸ் ஓண்ன எழுதியிருப்பாங்க. அத படிக்கிற மூடோ, நேரமோ அப்ப இல்லாம இருக்கலாம். ஆனா, அத படிக்கலான்றப்ப தேடி எடுக்கிறது சிரமம். எழுதினவரு பேரு கூட அப்ப ஞாபகத்துக்கு வராது. அதுக்காகவே ஃபேஸ்புக் கொடுத்திருக்கும் சோப்பு டப்பா தான் “Save" ஆப்ஷன்.
இதுக்கு வழிமுறைலாம் ரொம்ப சிம்பிள். அந்த ஸ்டேட்டஸோட வலது மூளைல இருக்கிற டவுன் ஏரோவை க்ளிக் பண்ணாலே save post ஆப்ஷன் வரும். அதை க்ளிக் பண்ணா சேவ் ஆயிடும். அப்படி சேமிச்சத எல்லாம் எடுத்து படிக்கணும்ன்னா இடது பக்க மெனுல Explore கீழ Saved இருக்கும்.
இன்னும் நிறைய பூதங்களை உள்ள வச்சிருக்கும் ஒரு அலாவுதீன் விளக்குதான் ஃபேஸ்புக் .

Courtesy: Vikatan

0 on: "பலரும் தெறிந்திறாத பேஸ்புக்கில்(facebook) மறைந்துள்ள ரகசியங்கள்! "