Sample Text

Theme images by Storman. Powered by Blogger.

Search This Blog

Pages

Thursday, 7 July 2016

ரூ.251 ஸ்மார்ட்போன் இன்று முதல் விநியோகம்!

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 251 ரூபாய் ஸ்மார்ட் போன்களை முன்பதிவு செய்தவர்களுக்கு இன்று முதல் விநியோகம் செய்யப்படவுள்ளன.
மிக குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன் ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம் அறிமுகம் செய்தது. அதற்கான முன்பதிவையும் ஆன்லைனில் துவக்கியது அந்த நிறுவனம். இடையில் வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியதால் முன்பதிவை ரிக்கிங் பெல்ஸ் நிறுவனம் நிறுத்தியது.
ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பேருக்கு, முதல்கட்டமாக பிரீடம் 251 போன்கள் விநியோகிக்கப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அரசின் உதவி கிடைத்தால் 251 ரூபாய்க்கு, 2 லட்சம் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 32 இன்ச் ஹச்.டி எல்.ஈ.டி டிவியையும் பத்தாயிரம் ரூபாய் விலையில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்துகிறது.

0 on: "ரூ.251 ஸ்மார்ட்போன் இன்று முதல் விநியோகம்!"