- ஆன்ராயிடு ரூடிங் என்றால் என்ன?
- ரூட் செய்வதன் நன்மை தீமைகள் என்ன?
- உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்வதால் என்னவெல்லாம் செய்து கொள்ள முடியும் ?
Android ரூட்டிங் என்றால், உங்களது Android ஸ்மார்ட் போனிட்கான Super User Access-ஐ வழங்குவதாகும்.
அதாவது சாதாரண நிலையில் இருக்கும் உங்களது Android ஸ்மார்ட் போனை ரூட் செய்வதன் மூலம், பல்வேறுவகையான வசதிகளை செய்து கொள்ள முடியும். உங்களது Android போனிற்கு எதுவெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இருந்தீர்களோ, அவற்றில் பெரும்பாலான சேவைகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும். உதாரணமாக Custom Software (ROM’s) வசதி, Custom Themes, வேகமான செயல்பாடு, அதிகரிக்கும் பேட்டரி நீடிப்பு, OS Upgrade என்று மேலும் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும்.
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் போனை நீங்கள் ஹாக் செய்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.
ரூட்டிங் -ன் நன்மைகள் என்ன ?
Custom Software (ROM’s)
ROM ஆனது Android போனை இயக்க உதவும் ஒரு சேவை ஆகும். உங்களது Android ஸ்மார்ட் போனில் Default ஆக இருக்கும் ROM -ஐ மாற்றும் வசதி சாதாரண போன்களில் கிடையாது. ஆனால் உங்களது போனை ரூட் செய்வதன் மூலம் Custom ROM வசதியை மேம்படுத்தி கொள்ளும் வசதி கிடைக்கும். இதன் மூலம் OS Upgrade வசதியை நமக்கு பெற்று கொள்ள முடியும்.
Custom Themes:
Android ஸ்மார்ட் போனுக்கு ஏற்கனவே Default ஆக உள்ள தீம் இல்லாமல் உங்கள் தேவைக்கேற்ப தீம்-ஐ மாற்றும் வசதியை பெற்று கொள்ள முடியும்.
போனின் வேகம் மற்றும் பேட்டரி பயன்பாடு அதிகரிக்கும்.
ரூட் செய்து கொள்வதன் மூலம் உங்களது ஸ்மார்ட் போனின் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும். அதே போல் உங்களது பேட்டரி பாவனை நேரத்திலும் முன்னேற்றம் தெரியும்.
இவைகள் தவிர WiFi and USB tethering மற்றும் Simple Backup Solution போன்ற உபயோகமுள்ள வசதிகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும்.
ரூட் செய்வதன் தீமைகள் என்ன?
உங்களது Android போனை ரூட் செய்வதால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை தான், உங்களது ஸ்மார்ட் போனிட்கான வாரண்டி கிளைம் செய்ய முடியாமல் போவது.
அடுத்து சில Android ஸ்மார்ட் போன்களில் ரூட் செய்வதனால் ஒரு சில செயலிகள் இயங்க மறுக்கலாம். இந்த பிரச்சினை ஏற்படுவது மிகவும் அரிது. இருந்த போதிலும் ரூட் செய்ய முன்னர் நீங்கள் இதை பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே கூறுகிறேன்.
Android மார்க்கெட் செயலிகள் அல்லாத செயலிகள் ஸ்மார்ட் போனில் நிறுவ முடியும் என்பதால், இணைத்தின் மூலம் வைரஸ் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இதை நீங்கள் தவிர்க்க
வேண்டுமானால் சிறந்த ஒரு வைரஸ் காப்பு செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி இருத்தல் வேண்டும்.
ரூட் செய்ய முன் உங்களது போனில் செய்ய வேண்டியவை.
அடுத்து, உங்களது போனை ரூட் செய்ய முன்னர், போனில் என்னவெல்லாம் செய்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாக பார்ப்போம்.
ஒரு சில ரூடிங் முறைகள் மூலம் உங்களது போனை ரூட் செய்வதால், உங்களது போனில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழிந்து போக வாய்ப்பு உள்ளது. ஆனால் இது அனைத்து ரூடிங் முறைகளுக்கும் பொருத்தம் இல்லை. நான் எனது போனை ரூட் செய்யும் போது, எது விதமான டேட்டாகளும் அழியவில்லை. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கையாக ரூட் செய்ய முன்னர், உங்களது போனில் இருக்கும் அனைத்து பைல்-களையும் பேக்கப் எடுத்து வைத்து கொள்வது பாதுகாப்பனதாகும்.
போன் பேட்டரி சார்ஜ்-ஐ 80%-க்கு அதிகமாக வைத்து கொள்ளுங்கள்.
ஆன்ராயிடு போனை ரூட் செய்வதற்கு குறைந்தது 5 முதல் 15 நிமிடம் வரை எடுக்கும். ஆகவே ரூட் ப்ராசெஸ் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் உங்களது போனில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால், சிஸ்டம் பைல்-களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே உங்களது போனில் குறைந்தது 80% ஆவது சார்ஜ் இருக்க வேண்டும்.
சாதாரண வேகத்துடன் கூடிய தடையில்லாத இன்டர்நெட் இணைப்பு
ரூட் செய்யும் போது சில சிஸ்டம் பைல் மோடிபிகேசன்-கள் நடைபெறும். ஆகவே இதை செய்து கொள்ள உங்களது போனில் இன்டர்நெட் இணைப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மேலும் குறித்த இன்டர்நெட் இணைப்பு தடையில்லாமல் தொடர்ந்து செயட்படகூடிய இன்டர்நெட் இணைப்பாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் ரூட் ப்ராசெஸ் நடைபெறும் போது சிஸ்டம் எரர்-கள் வரும் வாய்ப்பு குறைவடையும்.
ரூட் செய்யும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் என்ன செய்வது?
ரூட் செய்யும் போது சிஸ்டம் அளவில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், எம்மால் எதுவுமே செய்ய முடியாது. அவ்வாறான சூழ்நிலை ஒன்றில், உங்களது போனை கஸ்டமர் சர்வீஸ் செண்டர் ஒன்றிற்கு எடுத்து சென்றே திருத்தி கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படியல்லாமல், ரூட் செய்யமுடியவில்லை. ரூட் எரர் என்ற செய்திகள் வருமேயானால், உங்களது போனை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் போனை பழைய நிலைக்கு திரும்ப பெற்று கொள்ள முடியும்.
சரி.. இப்போது முக்கியமான பகுதிக்கு வருவோம்..
ரூட் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்வது எப்படி?
பெரும்பாலும் உங்களுடைய போன் ரூட் செய்யப்பட்டதும் குறித்த செயலியில், ரூட் சரியாக செய்யப்பட்டது என்ற வாசகம் தோன்றும். அது தவிர, கீழ்வரும் சிறப்பு செயலி மூலம் கூட உங்களது ஆன்ராயிடு போன் சரியாக ரூட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளமுடியும்.
அன்-ரூட் செய்வது எப்படி?
சரி.. இறுதியாக என்னுடைய போனுக்கு ரூட் தேவையில்லை என்று நினைப்பவர்கள் எப்படி ரூட்-ஐ இல்லாமல் செய்து கொள்வது என்று பார்ப்போம். இந்த வேலையை மிக இலகுவாக ஒரு சில கிளிக் -களில் செய்து முடிக்க உதவுகிறது Androidஅன்-ரூட் செய்வதற்கான கீழ்வரும் சிறப்பு செயலி.
இந்த செயலியை தரவிறக்கி உங்களது போனில் நிறுவி கொள்ளுங்கள்.
அடுத்து ரூட் செய்யப்பட்ட உங்கள் போனில் இந்த செயலியை ஆரம்பித்து கீழே காட்டியுள்ளவாறு செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லுங்கள்.
அதிலே Full Unroot என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்களது Android ஸ்மார்ட் போன் அன்-ரூட் ஆக தயாராகி விட்டது.உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்து விட்டேன் என்று நினைக்கின்றேன். மேலே குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி உங்களது ஆன்ராயிடு போனையும் மிக இலகுவாக ரூட் செய்திடுங்கள்.
Links:
1) iroot for windows
2) Root checker.apk
3) Unroot.apk




தங்களின் விளக்கம் அறிந்தேன்!
ReplyDeleteநன்றி!! மேலும் ஒரு கேள்வி?
அன்ரூட் செய்வதால் நமது செல் மற்றும் செயலிகளுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்?