Sample Text

Theme images by Storman. Powered by Blogger.

Search This Blog

Pages

Monday, 15 May 2017

ரான்சம்வேர் - பணம் பறிக்கும் புதிய வைரஸ்

- No comments

தற்போது இணைய உலகத்தை ரான்சம்வேர் என்ற ஒரு வைரஸ் தாக்கி வருகிறது. ரான்சம்வேர் என்பது வைரஸை பயன்படுத்தி பணம் பறிக்கும் முறை. அதாவது இந்த வைரஸ் உங்கள் கணினியை தாக்கினால், அதில் உள்ள முக்கியமான டேட்டாக்கள் அனைத்தும் முடக்கப்படும். அதன்பின், ஹக்கர்கள் பணம் கொடுத்தால் தான் அந்த டேட்டாக்களை விடுவிப்பேன் என்று மிரட்டுவது தான் ரான்சம்வேர். இப்போது இணையத்தில் இந்த வைரஸ் தான் அதிகமாக பரவி வருகிறது. முக்கிய நாடுகளில் உள்ள அரசாங்க தளங்கள் மற்றும் பல நிறுவனங்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இந்த வைரஸ்கள் வானகிரிப்ட், டபிள்யூகிரை ஆகிய பெயர்களில் உள்ளது. இதிலிருந்து உங்கள் கணினியை அல்லது ஸ்மார்ட்போனை பாதுகாக்க என்னென்ன வழிகள் என்று பார்க்கலாம்.
1.தெரியாத முகவரியிலிருந்து வரும் இ-மெயிகளை திறக்க வேண்டாம். இ-மெயில் மூலமாகத்தான் ரான்சம்வேரை ஹக்கர்களை அதிக அளவில் பரப்பி வருகிறார்கள்.
2.இ-மெயிலில் வரும் அட்டாச்மென்ட்டை கவனத்துடன் ஸ்கேன் செய்த பின்பு தான் திறக்க வேண்டும்.
3.கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆண்ட்டி வைரஸ் அகியவற்றை அப்டேட் செய்வது நல்லது.
4.ரான்சம்வேர் தாக்குதல் முன்கூட்டியே கணிக்கப்பட்டு, அதற்கேற்ப தடுப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு அப்டேட்டுகள் வெளியிடப்படுவதால், இது உங்கள் கணினியை ரான்சம்வேர் வைரஸிடம் இருந்து பாதுகாக்க உதவும்.
5.உங்கள் கணினியை அவ்வப்போது ஸ்கேன் செய்வது நல்லது. பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை கணினியுடன் இணைக்கும்பொழுது அதை முழுவதுமாக ஸ்கேன் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
6.உங்களது பாஸ்வேர்டை 180 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
7.கணினியிலுள்ள டேட்டாவை அடிக்கடி பேக்கப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம், ரான்சம்வேர் தாக்குதல் நடந்தாலும் பேக்கப் எடுத்து வைத்த டேட்டாவை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேக்கர்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
8-உங்கள் கணினி ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளானால், உடனடியாக இணைய இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.

Wednesday, 12 April 2017

ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி?

- No comments

“ஆண்டவன் புண்ணியத்தில் ஆதார் வாங்கிட்டேன்” என மக்கள் விடும் நிம்மதிப் பெருமூச்சு புரிகிறது. ஆனால், நம் கடமையை அதோடு முடிய விட மாட்டேன் என்கிறது மத்திய அரசு. “ஆதார் எல்லாம் கட்டாயம் இல்லை” என ஒரு பக்கம் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து சொல்லி வருகிறது. இன்னொரு பக்கம், எல்லாவற்றுக்கும் ஆதார் அவசியம் என அறிவித்தபடி இருக்கிறது மத்திய அரசு. காவிரியில் தண்ணீர் விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொன்னதை மாநில அரசே கேட்கவில்லை. மத்திய அரசு மட்டும் என்ன மாங்காய்த் தொக்கா? இதோ… பான் நம்பரோடு ஆதார் எண்ணை இணைக்கவில்லையென்றால், பான் நம்பரே செல்லாமல் போய்விடும் எனச் சொல்லிவிட்டார்கள். அரசு சொல்லும் விஷயத்தைச் செய்ய நினைத்தாலும் செய்ய விடுமா அவர்கள் சிஸ்டம்? “உங்க அப்பாரு பேரு ரெண்டு சுழியா? இதுல மூணு இருக்கே”, “உங்க கண்ணுக்கு மேல என்ன இமை இருக்கு”னு ஏதேதோ காரணம் சொல்லி அலைக்கழிக்கும். அப்படியெல்லாம் ஆகக் கூடாது என முதல் வரியில் சொன்ன ஆண்டவனை வேண்டிக்கொண்டு மேலே படியுங்கள். பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என விளக்குகிறேன்.
வருமான வரித்துறையின் லாக் இன் பக்கத்துக்கு முதலில் வரவும். Click here to log in!

இதற்கு முன் எப்போது இங்கே வந்தோம் எனப் பலருக்கும் நினைவில்லாமல் இருக்கலாம். அல்லது பழைய மொபைல் எண்ணைப் பதிவு செய்திருக்கலாம். லாக் இன் ஐடி, பாஸ்வேர்டு நினைவில் இருப்பவர்கள் லாக் இன் செய்யலாம். மற்றவர்கள் Forgot Password க்ளிக் செய்து அடுத்த பக்கத்துக்குத் தாவவும்.
உங்கள் பான் நம்பர்தான் உங்கள் யூஸர் ஐடி. அதையும் captcha code-ஐயும் டைப் செய்து அடுத்த பக்கத்துக்குத் தாவவும்.
இங்கே டிராப்டவுன் பாக்ஸில் நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் மூன்றாவது OTP ஆப்ஷனை செலக்ட் செய்யவும். அடுத்த பக்கத்தில் நமது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தந்தால், அதற்கு அனுப்புவார்கள். அதை வைத்து பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம். மொபைல் எண் பழைய எண்ணாக இருந்தால், புதிய எண்ணைக் கொடுத்து அதையும் இங்கே மாற்றிக்கொள்ளலாம்.
பாஸ்வேர்டு மாற்றிய பின் 12 மணி நேரம் கழித்தே பான் நம்பரோடு ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
12 மணி நேரம் கழித்து லாக் இன் செய்ததும், ஒரு பாப் அப் விண்டோ வரும். அதில், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா எனக் கேட்கும். அந்த பாப் அப்பை விட்டுவிட்டால், புரொபைல் செட்டிங்குக்குப் போய்க்கூட ஆதார் எண்ணை இணைக்க முடியும்.

இங்கே உங்கள் பெயர், பிறந்த தேதி ஆகிய தகவல்களை கவனமாகப் பதிவு செய்யவும். அனைத்துத் தகவல்களும் முன்னர் கொடுத்த தகவல்களோடு பொருந்தினால், ஆதார் எண்ணைக் கேட்கும். அதையும் டைப் செய்து “Link now” கொடுத்தாlல் பான் எண்ணோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்
“your aadhar number is successfully linked with pan card” என மெசெஜ் வந்தால், முதல் வரியில் சொன்ன ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் பெயரோ, இனிஷியலோ மேட்ச் ஆகவில்லை என மெசெஜ் வந்தால், உடனடியாக ஆதார் உதவி எண்ணைத் 1800-300-1947 அல்லது 1947 தொடர்பு கொண்டு என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுங்கள். 

Tuesday, 11 April 2017

Jio Launches New “Dhan Dhana Dhan” Offer

- No comments
Jio’s “Summer Surprise” was banned by TRAI . Now JIO Is back with Stunning Offer named as  “Dhan Dhana Dhan” scheme. , the company has officially launched 2 new tariff plans and they are sure to create a “Dhamaka” in the market once again. These plans have a validity of 3 months and they are Very attractive.
1 GB per day plan – Rs 309
Jio has launched a offer at Rs 309 this is for users who have already registered for the Prime membership. Under this, users will get unlimited voice calls (Local + STD) and unlimited SMS. Along with that, users will be offered 1 GB data per day i.e. 30 GB per month. The validity of this plan is 84 days; this means you will get 84 GB in just Rs 309. Even non-Prime members can avail this offer, but they will have to pay a higher amount i.e. Rs 408 (Rs 309 + Rs 99).
2 GB per day plan- Rs 509
If you want to avail 2 GB data per day, you need to choose the Rs 509 plan. This plan also offers unlimited calling and unlimited data for 84 days. Moreover, it will offer 2 GB per day means 60 GB per month and 252 GB for 3 months. Isn’t it a great deal? Non-prime members can enjoy this offer by paying Rs 608 (Rs 509 + Rs 99).

Saturday, 8 April 2017

இரண்டு நாட்களில் பான் கார்டு பெறுவது எப்படி..?

- No comments
நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரி செலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10 இலக்க எண்ணெழுத்தாகும். பான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம். முன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினை பெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டே நாட்களில் பான் கார்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.



1. என்எஸ்டிஎல் இணையதளத்தில் உள்நுழைக
 என்எஸ்டிஎல் இணையதளத்தில் உள்நுழைந்த பிறகு உங்களுக்கான படிவத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் இணையம் அல்லது ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமா என்பதைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இணையம் மூலமாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

2. எந்த படிவம் என்பதைத் தேர்வு செய்யவும் 
வழிகாட்டுதல்களை வாசித்த பிறகு என்ன படிவம் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும் பின்னர் தேவையான விவரங்களைப் படிவத்தில் உள்ளிடவும்.

3. விண்ணப்பத்தை எப்படிச் சமர்ப்பிப்பது?
படிவத்தை முழுவதுமாக நிரப்பிய பிறகு, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும். ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்களும் பதிவிறக்கிய படிவத்தை அச்சிட்டு அதில் விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர் தேவையான விவரங்களை இணைக்க வேண்டும்.

4. விண்ணப்பத்தின் நிலை கண்டறிக
 விண்ணப்பத்தைப் பதிவேற்றிய பிறகு உங்களுக்கு ஒப்புகை எண் ஒன்று கிடைக்கும், அதை வைத்துக்கொண்டு  https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html என்ற இணைப்பிற்குச் சென்று உங்கள் விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்று சரிபார்த்துக்கொள்ளலாம். இப்படிச் செய்யும் போது உங்களுக்கு எப்போதும் போல பான் கார்டினை பெற 15 முதல் 20 நாட்கள் வரை ஆகும். எனவே இங்குத் தெரிவினை பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்.

5. 48 மணி நேரத்தில் பான் கார்டு
படிவத்தினை சமர்ப்பித்த பிறகு நீங்கள் சரிபார்ப்பு முறை படிகளை செய்ய வேண்டும். உங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லை என்றாலும் பான் கார்டு வைத்திருப்பது நல்லது.

Monday, 3 April 2017

ரூ.30,000/-க்குள் மாணவர்களுக்கான டாப் 5 பெஸ்ட் லேப்டாப்கள்.!

- No comments
"எப்படியாவது ஒரு நல்ல லேப்டாப் வாங்கி விட வேண்டும்" என்பது இன்றுவரை பலருக்கும் நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. அதுவும் குறிப்பாக மாணவ பருவத்தில் உள்ளவர்களுக்கு லேப்டாப் ஒன்று இல்லாதது ஒரு பெரிய குறையாகவே இருக்கும்.
அப்படியான உங்களின் லேப்டாப் கனவை நிறைவேற்றி உங்களின் குறையை தீர்த்து வைக்க இதோ எங்களால் ஆன உதவி - அதாவது, ரூ.30,000/-க்குள் பட்ஜெட் எல்லை கொண்ட மாணவர்களுக்கான சிறந்த 5 லேப்டாப்கள் பற்றிய தொகுப்பை உங்களுக்கு வழங்குகிறோம்.
பழைய மாடல் லேப்டாப் கொண்டிருப்பவர்களும் இந்த தொகுப்பின் கீழ் புத்திய லேப்டாப் வாங்குவதற்கான தெளிவை பெற முடியும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். உங்களுக்கு வழங்க நம்பமுடியாத வன்பொருள் கொண்ட பல ஹை-எண்ட் லேப்டாப்களின் தொகுப்பு எங்களிடம் உள்ளது, இருப்பினும் இந்த தொகுப்பு ரூ.30,000/- என்ற விலை எல்லை கொண்ட வர்களுக்காக வழங்குகிறோம். உலகம் முழுவதும் மாணவர்கள் முதன்மையாக கருதும் டாப் ஐந்து லேப்டாப்களின் தொகுப்பு இதோ.

டெல் இன்ஸ்பிரான் 15 3541 - விலை : ரூ.19,959/-

- 15. இன்ச் எல்இடி பேக்லிட்
- ரேடான் (டிஎம்) ஆர்2 கிராபிக்ஸ் உடனான ஏஎம்டி இ1-6010 ஏபியூ 
- விண்டோஸ் 8.1 ஓஎஸ்
- 4ஜிபி ரேம் டிடிஆர்3எல் 1600மெகா ஹெர்ட்ஸ்
- 500ஜிபி 5400ஆர்பிஎம் சாடா (SATA) ஹார்ட் டிரைவ்
- ஏஎம்டி இன்டகிரேடட் கிராபிக்ஸ்
- ட்ரூலைஃப் அண்ட் எச்டி ரெசெல்யூஷன் (1366 x 768)
- பவர்டு பை 4-செல், 40வாட்ஹவர்ஸ் பேட்டரி

லெனோவா எசென்ஷியல் ஜி50-45 - விலை ரூ.28,250/-

-15.6 அங்குல பேக்லிட் எல்இடி டிஸ்ப்ளே
- ஏஎம்டி இ1-6010
- 4ஜிபி ரேம்
- 500ஜிபி எச்டிடி
- 64 பிட் விண்டோஸ் 10 ஓஎஸ்
- இன்டகிரேடட் கிராபிக்ஸ்
- 4செல் 32வாட்ஹவர்ஸ் பேட்டரி

ஏசர் ஆஸ்பியர் இ5-571 நோட்புக் - விலை ரூ.25,425/-

- 15.6 அங்குல டிஸ்ப்ளே
- இன்டெல் கோர் ஐ5 4210
- 4ஜிபி ரேம்
- 1டிபி எச்டிடி
- லினக்ஸ்
- இன்டகிரேடட் கிராபிக்ஸ்
- எச்டி கிராஃபிக்ஸ்
- ஒரு ஆண்டு உற்பத்தியாளர் வாரண்டி

அசுஸ் ஏ555எல்ஏ -எக்ஸ்எக்ஸ்1560டி - விலை ரூ.27,500/-

- 15.6 அங்குல டிஸ்ப்ளே (1366x768 பிக்சல் தீர்மானம்)
- இன்டெல் எச்டி4400 கிராபிக்ஸ்
- 1.7ஜிகாஹெர்ட்ஸ் கோர் ஐ3 4005யூ செயலி
- 4ஜிபி டிடிஆர்3 ரேம்
- 1டிபி 5400ஆர்பிஎம் சீரியல் ஏடிஏ ஹார்ட் டிரைவ்
- இலவச டாஸ் (DOS)
- லித்தியம்-பாலிமர் பேட்டரி

ஹெச்பி 15-ஏவ்வை523டியூ - விலை ரூ.29,899/-

- 15.6 அங்குல டிஸ்ப்ளே (1366x768 பிக்சல் தீர்மானம்)
- விண்டோஸ் 10 ஹோம் ஓஎஸ் 
- 2ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3-5005யூ ஐந்தாம் தலைமுறை செயலி
- 4ஜிபி டிடிஆர்3எல் ரேம்
- 500ஜிபி 5400ஆர்பிஎம் சீரியல் ஏடிஏ ஹார்ட் ட்ரைவ்
- இன்டெல் எச்டி 5500 ஜிபி கிராபிக்ஸ்
- லித்தியம்-பாலிமர் பேட்டரி

Saturday, 1 April 2017

ஜியோ பிரைம் (Jio Prime) ரீசார்ஜ் செய்யாதவர்கள் கவனத்திற்கு..!

- 1 comment
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கியது முதல் வாடிக்கையாளர்களுக்கு இலவச சலுகைகள் வாரி வழங்கியது. இப்போது என்னவென்றால் ஜியோவின் வெல்கம் ஆஃபர் மற்றும் நியூ இயர் ஆஃபர்கள் முடிந்த நிலையில் மார்ச் 31-ம் தேதிக்குள் பிரைம் மெம்பராக மார வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்த ஜியோ ஏப்ரல் 15 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு மட்டும் ரீசார்ஜ் செய்து மகிழலாம் என்றும் ஜியோ அறிவித்துள்ளது. இதனால் போட்டி நிறுவனங்கள் இடையில் நேரடியாக விலைப் போரில் ஈடுபட்டு வருகின்றது ஜியோ என்று கூறலாம்.

ஜூலை வரை ஆஃபர் 

ஏப்ரல் 15-ம் தேதிக்குள் யாரெல்லாம் ஜியோ பிரைம் 99 ரீசார்ஜ் செய்கின்றார்களோ அவர்கள் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தல் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆஃபரை ஜூலை வரை தொடர்ந்து பயன்படுத்தி மகிழலாம்.

சம்மர் சர்பிரைஸ் 

இந்தச் சலுகை திட்டத்தின் பெயரை சம்மர் சர்பிரைஸ் என்ற பெயரில் வெள்ளிக்கிழமை ஜியோ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் ரீசார்ஜ் செய்தால் போதும் 

ஜியோ பிரைம் ரீசார்ஜினை செய்த வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இந்தச் சம்மர் சர்பிரைஸ் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் மாதம் தான் அடுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டும்.ஜியோ நெட்வொர்க்கின் பிரம் ஆஃபரில் இது வரை 72 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்து இருப்பதாகவும், அது ஏப்ரல் 15-ம் தேதிக்குள் 100 மில்லியன் பயனர்களைக் கடக்கும் என்றும் ஜியோ எதிர்பார்க்கின்றது


அம்பானி அறிவிப்பு

 ஜியோ இலவச சேவை முடிவுறுகின்றது. ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யுங்கள் இல்லை என்றால் உங்களுக்கான சேவை துண்டிக்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தில் தலைவர் முகேஷ் அம்பானி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அதிரடி ஆஃபரால் இலவசத்தைப் பயன்படுத்திய பிறகு தூக்கி எறிந்துவிடலாம் என்று இருந்த ஜியோ பயனர்களும் பிரைம் ஆஃபர் ரீசார்ஜ் செய்வார்கள் என்பது ஜியோவின் திட்டமாகும்.

Friday, 10 March 2017

90% பயனர்களுக்கு தெரியாத 7 ஆண்ட்ராய்டு இரகசியங்கள்.!

- No comments


உங்கள் கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத வண்ணம் திறன் கொண்டவைகள், அது நம்பமுடியாத விடயங்களை தன்னுள் அடைத்து வைத்துள்ளது.!

ஒப்பிடும் போது, ஆப்பிள் கருவிகளை விட ஆண்ட்ராய்டு கருவிகள் பெருவாரியான மக்களை கவர்வதற்கு முக்கியமான காரணம் அவைகள் 'யூசர் பிரெண்ட்லி' கருவிகளாகும். பயனர் நட்பு என்றால் பயனர் அவரின் கருவியை எப்படியெல்லாம் தன் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் மாற்றியமைக்க விரும்பினாலுக் அதற்கு வளைந்துகொடுக்கும் தன்மை கொண்ட நிலைப்பாட்டை தான் 'யூசர் பிரெண்ட்லி' என்கிறோம்.

வெளிப்படையாக கூறவேண்டுமென்றால் நம்மில் பெரும்பாலானோர்கள் ஆண்ட்ராய்டு கருவிகளை நமக்கேற்ற வசதியான ஒரு கருவியாக பயன்படுத்துவதில்லை. உண்மையில் உங்கள் கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத வண்ணம் திறன் கொண்டவைகள், அது நம்பமுடியாத விடயங்களை தன்னுள் அடைத்து வைத்துள்ளது. அம்மாதிரியான ஆண்ட்ராய்டு இரகசியங்கள் 90% பயனர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை தெரியபப்டுத்தும் தொகுப்பே இது.!

டெக்ஸ்ட்-டூ-ஸ்பீச்

உங்களால் ஒரு கட்டுரையை வாசிக்க மட்டுமில்லாது அதை கேட்கவும் முடியும் அதற்கு நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்தை கையில் கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு உள்வரும் தகவல்களை பார்ப்பதற்கு பதில் நீங்கள் கேட்க விரும்பினால் செட்டிங்ஸ் > அக்ஸஸிபிலிட்டி சென்று டெக்ஸ்ட்-டூ-ஸ்பீச் அவுட்புட் ஆப்ஷனை ஆன் செய்யவும்.

ஸ்மார்ட்போன் ரிமோட் கண்ட்ரோல்

செட்டிங்ஸ் > செக்யூரிட்டி சி என்று டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் சென்று ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் அருகாமையில் இருக்கும் பெட்டிகளில் அல்லோ ரிமோட் லாக் அண்ட் ஏரேஸ் ஆப்ஷனை இயக்க ஒருவேளை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை இழந்தால் நீங்கள் அதை எளிமையாக இந்த குறிப்பிட்ட வலைத்தளம் மூலம் நீங்கள் கண்டறியலாம் மற்றும் பிளாக் செய்யாமல் உங்கள் தகவல்களை மீட்கலாம்

எளிமையான பேட்டரி சேவர்

நீங்கள் உங்கள் திரையில் கருப்பு அல்லது எளிய இருண்ட பின்னணி தேர்வு செய்தால், உங்கள் ஆண்ட்ராய்டு அக்கருவியின் ஆட்டோமட்டிக் பிக்சல் ஹைலைட்டிங் அணைக்கப்படும் மற்றும் இதன் மூலம் நீங்கள் உங்கள் சாதனம் நீண்ட நேரம் சார்ஜ் நீடிக்கப் பெறுவதை காணலாம். இந்த குறிப்பிட்ட அம்சம் தற்போதைக்கு அனைத்து ஆண்ட்ராய்டு கருவிகளிலும் கிடைக்காது என்பதும் ஒருவேளை அப்டேட் செய்யப்பட்டு என்பதால் முயற்சி செய்து பார்க்க பரிந்துரைக்கப்படுகிறீர்கள்

கெஸ்ட் மோட்

நீங்கள் தற்காலிகமாக மற்றொரு நபருக்கு உங்கள் தொலைபேசியை கொடுக்க வேண்டும் அதே சமயம் உங்கள் தனிப்பட்ட தரவுகளின் ரகசியத்தையும்பாதுக்காக்க வேண்டுமெனில் உங்களுக்கு கெஸ்ட் மோட் உதவும். இரண்டு விரல்களால் மேலிருந்து கீழே ஸ்வைப் சிறிது மேல் வலது பக்கத்தில் உள்ள பயனர் ஐகானை டாப் செய்யவும். ஆட் கெஸ்ட் ஐகான் தோன்றும், இப்போது நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை கையாளும் நபர் எடுக்க அனுமதிக்க வேண்டிய நடவடிக்கைகளை தேர்வு செய்ய முடியும்.

ஸ்க்ரீன் மெக்னீபையர்

சில கண்பார்வை கோளாறு கொண்ட மக்கள் பெரும்பாலும் இந்த வசதியை இயக்கி கொள்ள பரிந்துரைக்கப்படுகிறீர்கள். வெறுமனே செட்டிங்ஸ் > அக்ஸஸிபிலிட்டி > மேக்னிபிக்கேஷன் கெஸ்டர்ஸ் செயல்படுத்துவதின் மூலம் நீங்கள் டாப் செய்யும் குறிப்பிட்ட இடம் மட்டும் டிஸ்ப்ளேவில் பெரிதாகும்.

தலை அசைவு மூலம் ஸ்மார்ட்போன் கட்டுப்பாடு

சூழ்நிலைகள் நீங்கள் உங்கள் கேஜெட் பயன்படுத்தும் முறையை ஆக்கிரமிக்கின்றன ஒருவேளை உங்கள் கருவியை கைகளால் இயக்க முடியாத நிலை ஏற்பட்டால் ஒரு தீர்வு இருக்கிறது. ஈவா பேஷியல் மவுஸ் என்றவொரு ஒரு இலவச பயன்பாட்டை நிறுவுவதின் மூலம் நீங்கள் உங்கள் தலை இயக்கங்கள் கொண்டு உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்த முடியும்.


Courtesy : GIZBOT