Sample Text

Theme images by Storman. Powered by Blogger.

Search This Blog

Pages

Thursday, 28 April 2016

150 ருபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு போனுக்கான மிகச்சிறந்த போட்டோ எடிட்டிங் செயலி(App) இலவசம்.

- No comments
சமூக வலைத்தளங்களுக்கு நாம் எமது போடோக்களை பதிவேற்றும் போது, வெறும் போட்டோகளாக மட்டும் பதிவேற்றாமல் அதற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் குறித்த போட்டோவை எடிட் செய்து பதிவேற்றுவது அனைவரினதும் வழக்கம்.
ஆனால் எமது போட்டோகளை அழகிய முறையில் எடிட் செய்து கொள்ள வேண்டும் என்றால் கணணி ஒன்று இருக்கும் பட்ச்சத்திலேயே மிகச்சிறந்த முறையில் எடிட் செய்து கொள்ள கூடியதாய் இருக்கும்.ஆனால் நீங்கள் கணனியில் இல்லாமல் போனில் இருந்து போட்டோகளை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகிரீர்கள் என்றால் இதோ உங்களுக்கோர் அருமையான போட்டோ எடிட்டிங் செயலி (ஆன்ராயிடு).
இந்த ஆன்ராயிடு போட்டோ எடிட்டிங் செயலி மூலம் நீங்கள் கணனியில் இருந்து போட்டோ ஒன்றை எடிட் செய்தால் எந்த அளவு தரம் மிக்கதாக இருக்குமோ அதே அளவு தரத்துடன் ஆன்ராயிடு போனில் இருந்து போட்டோகளை எடிட் செய்து கொள்ள கூடியதாய் இருக்கும்.
இந்த போட்டோ எடிட்டிங் செயலியின் தனிச்சிறப்பு மிக்க வசதிகளாக, குறித்த ஒரு போட்டோவில் இருக்கும் குறித்த ஒரு பகுதியை மட்டும் மறைக்க உதவுவது, அழகிய லைட் எபெக்ட்-களை சேர்த்து கொள்வது என்று சிறந்த பல எடிட்டிங் வசதிகளை குறிப்பிடலாம்.
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்க்ம் ஆன்ராயிடு போட்டோ எடிட்டிங் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, குறித்த போட்டோ ஒன்றை தெரிவு செய்து உங்கள் விருப்பம் போல எடிட் செய்து கொள்ள முடியும்.
நிற எபெக்ட்-களை ஏற்படுத்தும் வசதி.
போட்டோ வில் இருக்கும் குறித்த ஒரு பகுதியை மறைக்கும் வசதி.
இவை தவிர இன்னும் பல சிறந்த வசதிகளை இந்த செயலில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
ஆன்ராயிடு போனுக்கேன்றே மிகச்சிறந்த போட்டோ எடிட்டிங் வசதிகளுடன் அறிமுகமாகி இருக்கும் இந்த போட்டோ எடிட்டிங் செயலி கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக கிடக்கும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன.
ஆகவே இந்த போட்டோ எடிட்டர் செயலியின் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ப்ரீமிஅம் பதிப்பை எப்படி இலவசமாக பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.

Click here : Photo editing App

Sunday, 3 April 2016

ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி?

- No comments


Election website link:  http://www.elections.tn.gov.in/


Saturday, 2 April 2016

ஆண்ட்ராய்டு ரூட்(Root) என்றால் என்ன? ரூட் பற்றிய முழு தகவல் !

- 1 comment



ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் காணப்படும் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று தான், ஆன்ராயிடு ரூடிங் என்றால் என்ன? ரூட் செய்வது எப்படி? ரூட் சென்வதன் நன்மை தீமைகள் என்ன என்பதாகும்.  இன்றைய பதிவில் ஆன்ராயிடு ரூடிங் சம்மந்தமான அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொள்ள போகிறேன். இந்த பதிவில் ரூடிங் சம்மந்தமான கீழ்வரும் விடயங்களை பற்றி விளக்கமாக பார்ப்போம்.

  1. ஆன்ராயிடு ரூடிங் என்றால் என்ன? 
  2. ரூட் செய்வதன் நன்மை தீமைகள் என்ன?
  3. உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்வதால் என்னவெல்லாம் செய்து கொள்ள முடியும் ? 
ஆன்ராயிடு ரூட்டிங் என்றால் என்ன?

Android ரூட்டிங் என்றால், உங்களது Android  ஸ்மார்ட் போனிட்கான Super User Access-ஐ வழங்குவதாகும்.
அதாவது சாதாரண நிலையில் இருக்கும் உங்களது Android ஸ்மார்ட் போனை ரூட் செய்வதன் மூலம், பல்வேறுவகையான வசதிகளை செய்து கொள்ள முடியும். உங்களது Android போனிற்கு எதுவெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இருந்தீர்களோ, அவற்றில் பெரும்பாலான சேவைகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும். உதாரணமாக Custom Software (ROM’s) வசதி, Custom Themes, வேகமான செயல்பாடு, அதிகரிக்கும் பேட்டரி நீடிப்பு, OS Upgrade என்று மேலும் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும்.
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் போனை நீங்கள் ஹாக் செய்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.

ரூட்டிங் -ன் நன்மைகள் என்ன ?
Custom Software (ROM’s)
ROM ஆனது Android போனை இயக்க உதவும் ஒரு சேவை ஆகும். உங்களது Android ஸ்மார்ட் போனில் Default ஆக இருக்கும் ROM -ஐ மாற்றும் வசதி சாதாரண போன்களில் கிடையாது. ஆனால் உங்களது போனை ரூட் செய்வதன் மூலம் Custom ROM வசதியை மேம்படுத்தி கொள்ளும் வசதி கிடைக்கும். இதன் மூலம் OS Upgrade வசதியை நமக்கு பெற்று கொள்ள முடியும்.
Custom Themes:
Android ஸ்மார்ட் போனுக்கு ஏற்கனவே Default ஆக உள்ள தீம் இல்லாமல் உங்கள் தேவைக்கேற்ப தீம்-ஐ மாற்றும் வசதியை பெற்று கொள்ள முடியும்.
போனின் வேகம் மற்றும் பேட்டரி பயன்பாடு அதிகரிக்கும்.
ரூட் செய்து கொள்வதன் மூலம் உங்களது ஸ்மார்ட் போனின் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும். அதே போல் உங்களது பேட்டரி பாவனை நேரத்திலும் முன்னேற்றம் தெரியும்.
இவைகள் தவிர WiFi and USB tethering மற்றும் Simple Backup Solution போன்ற உபயோகமுள்ள வசதிகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும்.

ரூட் செய்வதன் தீமைகள் என்ன?
உங்களது Android போனை ரூட் செய்வதால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை தான், உங்களது ஸ்மார்ட் போனிட்கான வாரண்டி கிளைம் செய்ய முடியாமல் போவது.
அடுத்து சில Android ஸ்மார்ட் போன்களில் ரூட் செய்வதனால் ஒரு சில செயலிகள் இயங்க மறுக்கலாம். இந்த பிரச்சினை ஏற்படுவது மிகவும் அரிது. இருந்த போதிலும் ரூட் செய்ய முன்னர் நீங்கள் இதை பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே கூறுகிறேன்.
Android மார்க்கெட் செயலிகள் அல்லாத செயலிகள் ஸ்மார்ட் போனில் நிறுவ முடியும் என்பதால், இணைத்தின் மூலம் வைரஸ் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இதை நீங்கள் தவிர்க்க
வேண்டுமானால் சிறந்த ஒரு வைரஸ் காப்பு செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி இருத்தல் வேண்டும்.

ரூட் செய்ய முன் உங்களது போனில் செய்ய வேண்டியவை.
அடுத்து, உங்களது போனை ரூட் செய்ய முன்னர், போனில் என்னவெல்லாம் செய்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாக பார்ப்போம்.
ஒரு சில ரூடிங் முறைகள் மூலம் உங்களது போனை ரூட் செய்வதால், உங்களது போனில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழிந்து போக வாய்ப்பு உள்ளது. ஆனால் இது அனைத்து ரூடிங் முறைகளுக்கும் பொருத்தம் இல்லை. நான் எனது போனை ரூட் செய்யும் போது, எது விதமான டேட்டாகளும் அழியவில்லை. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கையாக ரூட் செய்ய முன்னர், உங்களது போனில் இருக்கும் அனைத்து பைல்-களையும் பேக்கப் எடுத்து வைத்து கொள்வது பாதுகாப்பனதாகும்.

போன் பேட்டரி சார்ஜ்-ஐ 80%-க்கு அதிகமாக வைத்து கொள்ளுங்கள்.
ஆன்ராயிடு போனை ரூட் செய்வதற்கு குறைந்தது 5 முதல் 15 நிமிடம் வரை எடுக்கும். ஆகவே ரூட் ப்ராசெஸ் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் உங்களது போனில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால், சிஸ்டம் பைல்-களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே உங்களது போனில் குறைந்தது 80% ஆவது சார்ஜ் இருக்க வேண்டும்.

சாதாரண வேகத்துடன் கூடிய தடையில்லாத இன்டர்நெட் இணைப்பு
ரூட் செய்யும் போது சில சிஸ்டம் பைல் மோடிபிகேசன்-கள் நடைபெறும். ஆகவே இதை செய்து கொள்ள உங்களது போனில் இன்டர்நெட் இணைப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மேலும் குறித்த இன்டர்நெட் இணைப்பு தடையில்லாமல் தொடர்ந்து செயட்படகூடிய இன்டர்நெட் இணைப்பாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் ரூட் ப்ராசெஸ் நடைபெறும் போது சிஸ்டம் எரர்-கள் வரும் வாய்ப்பு குறைவடையும்.

ரூட் செய்யும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் என்ன செய்வது?
ரூட் செய்யும் போது சிஸ்டம் அளவில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், எம்மால் எதுவுமே செய்ய முடியாது. அவ்வாறான சூழ்நிலை ஒன்றில், உங்களது போனை கஸ்டமர் சர்வீஸ் செண்டர் ஒன்றிற்கு எடுத்து சென்றே திருத்தி கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படியல்லாமல், ரூட் செய்யமுடியவில்லை. ரூட் எரர் என்ற செய்திகள் வருமேயானால், உங்களது போனை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் போனை பழைய நிலைக்கு திரும்ப பெற்று கொள்ள முடியும்.
சரி.. இப்போது முக்கியமான பகுதிக்கு வருவோம்..
ரூட் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்வது எப்படி?
பெரும்பாலும் உங்களுடைய போன் ரூட் செய்யப்பட்டதும் குறித்த செயலியில், ரூட் சரியாக செய்யப்பட்டது என்ற வாசகம் தோன்றும். அது தவிர, கீழ்வரும் சிறப்பு செயலி மூலம் கூட உங்களது ஆன்ராயிடு போன் சரியாக ரூட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளமுடியும்.

அன்-ரூட் செய்வது எப்படி?
சரி.. இறுதியாக என்னுடைய போனுக்கு ரூட் தேவையில்லை என்று நினைப்பவர்கள் எப்படி ரூட்-ஐ இல்லாமல் செய்து கொள்வது என்று பார்ப்போம். இந்த வேலையை மிக இலகுவாக ஒரு சில கிளிக் -களில் செய்து முடிக்க உதவுகிறது Androidஅன்-ரூட் செய்வதற்கான கீழ்வரும் சிறப்பு செயலி.
இந்த செயலியை தரவிறக்கி உங்களது போனில் நிறுவி கொள்ளுங்கள்.
அடுத்து ரூட் செய்யப்பட்ட உங்கள் போனில் இந்த செயலியை ஆரம்பித்து கீழே காட்டியுள்ளவாறு செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லுங்கள்.
அதிலே Full Unroot என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்களது Android ஸ்மார்ட் போன் அன்-ரூட் ஆக தயாராகி விட்டது.உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்து விட்டேன் என்று நினைக்கின்றேன். மேலே குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி உங்களது ஆன்ராயிடு போனையும் மிக இலகுவாக ரூட் செய்திடுங்கள்.

Links:
                1)  iroot for windows

                2)  Root checker.apk

                3)  Unroot.apk

Friday, 1 April 2016

ஐபோன்(iPhone) எஸ்.இ அறிமுகம்!

- No comments
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த இருந்த ஐபோன் எஸ்.ஈ தொடர்பில் நீண்ட நாட்களாக பலவேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் ஐபோன் எஸ்.ஈ எனும் ஸ்மார்ட் போன் நேற்று ஆப்பிள் நிறுவனத்தால் உத்தியோகபூர்வமாகஅறிமுகப்படுத்தப்பட்டது.
இது ஐபோன் 5 எஸ் ஸ்மார்ட் போனின் தோற்றத்தை கொண்டிருந்தாலும் அதனை விட வேகத்திலும், கிராபிக்ஸ் திறனிலும் கூடியதாகும்.
ஐபோன் எஸ்.ஈ ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள Apple A9 ப்ராசசரானது ஐபோன் 5 எஸ் ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள Apple A7 ப்ராசசரை விட இரு மடங்கு வேகமாக இயங்கக்கூடிய அதே நேரம் கிராபிக்ஸ் திறனுக்காக
ஐபோன் எஸ்.ஈ ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள PowerVR GT7600 எனும் GPU (graphic processing unit) ஆனது
ஐபோன் 5 எஸ் ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள PowerVR G6430 GPU ஐ விட மூன்று மடங்கு வேகத்திலும் இயங்கக் கூடியதாகும்.
மேலும் ஐபோன் எஸ்.ஈ ஸ்மார்ட் போனில் 4K திறனில் வீடியோ கோப்புக்களை பதிவு செய்துகொள்ளும் வகையில் 12 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது ஐபோன் 5 எஸ் ஸ்மார்ட் போனில் 8 மெகாபிக்சல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவைகள் 4 அங்குல திரையை கொண்டுள்ள இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ் 9.3 இயங்குதளத்தை கொண்டு இயங்குகின்றது.
4 ஜி வலையமைப்பு மற்றும் வை-பை வலையமைப்பை வேகமாக பயன்படுத்துவதற்கான வன்பொருளை கொண்டுள்ள இவைகள் லைவ் போட்டோ பிடிப்பதற்கான வசதியையும் கொண்டுள்ளது. எனினும் ஐபோன் 6-எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் போன்ற ஸ்மார்ட் போன்களில் அறிமுகப்படுத்தப்பட்ட 3டி டச் வசதி இதில் வழங்கப்படவில்லை.
16 ஜிபி மற்றும் 64 ஜிபி ஆகிய உள்ளக நினைவகங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் விலைகள் முறையே கிட்டத்தட்ட 26,500 மற்றும் 33,250 இந்திய ரூபாய்கள் ஆகும். இது மே மாத இறுதிக்குள் 100 நாடுகளில் விற்பனைக்கு விடப்படவுள்ளது.

Reward Me இணையதளம் வழங்கும் ரூபாய் 400 மதிப்புள்ள இலவச பொருட்கள்.

- No comments
 Reward Me இணையதளம் ரூபாய்.400 மதிப்புள்ள தனது கம்பெனி தயாரிப்பு பொருட்களை ( Ariel, Head and shoulders shampoo, Oley Cream, etc.,) இலவசமாக வழங்குகிறது.தனது கம்பெனி பொருட்களை விளம்பரப்படுத்தும் விதமாக இச்சலுகையை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இச்சலுகையை பெற கீழ் கண்ட வழிமுறைகளை கவனமாக பின்பற்றவும்.
வழிமுறைகள் :(முழுமையாக வாசித்து விட்டு அந்த இணையதளத்திற்கு செல்லவும்)
முதலில் Reward Me Account ஐ இங்கு சென்று REGISTER செய்யவும். – CLCK HERE .REWARDME REGISTER
(குறிப்பு: USE Chrome or Uc browser”)
      Register செய்யும் பொழுது கீழே      கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.இல்லையெனில் இந்த சலுகையை பெற இயலாது.
 (i) விபரங்களை பூர்த்தி செய்யும் பொழுது gender(You are a) என்னும் இடத்தில் women என்று கொடுக்கவும். மேலும் வயதைக் கொடுக்கும் பொழுது 26 வயதிற்கு மேல் கொடுக்கவும். (ஏனெனில் அவர்களுக்கு மட்டுமே இச்சலுகை)


(ii)பின்னர் Name யை பூர்த்தி செய்யும் பொழுது உங்களுக்கு தெரிந்த ஏதாவது பெண்ணின் பெயர் அல்லது உங்கள் வீட்டில் உள்ள ஏதாவது ஒரு பெண் உறுப்பினர் பெயரை கொடுக்கவும். (அவர்களின் பெயரில் தான் Courier வரும்.அதனால் தெரிந்த பெயரைக் கொடுக்கவும்.)
Register
பின்னர் கேட்கப்பட்டுள்ள மற்ற விபரங்களை பூர்த்தி செய்யவும். (email,Password, Pincode etc.,)
கடைசியாக உங்கள் மொபைல் நம்பரை கொடுத்து verify செய்யவும்.(OTP code உங்கள் மொபைலுக்கு sms மூலம் வரும்.)
அது உங்களை இலவச பொருட்கள் உள்ள பக்கதிற்கு கொண்டு செல்லும்.அங்கு பல இலவச பொருட்கள் காட்டப்படும். அனைத்து பொருட்களையும் தேர்வு செய்யவும். கடைசியாக உங்கள் வீட்டு முகவரி மற்றும் pincode முதலிய விபரங்களை பூர்த்தி செய்து Check Out செய்யவும்.
அவ்வளவுதான்.இலவச பொருட்கள் உங்கள் வீட்டிற்கு இரண்டு வாரங்களுக்குள் கூரியர் மூலம் வரும்.(sms மூலம் தகவல் தெரிவிக்கபடும்.FREE DELIVARY).பயனுள்ள இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் அவசியம் பகிரவும்.